பிரபல இயக்குனர் கங்கை அமரனிடம் நெறியாளர் ஒருவர் வாங்கி கட்டி கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது.
முந்தைய காங்கிரஸ் அரசு பாரத நாட்டை ஆண்டதற்கும் தற்பொழுது பா.ஜ.க அரசு ஆள்வதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது என்பதை ஒவ்வொரு இந்தியரும் நன்கு அறிவர். பாரதப் பிரதமராக மோடி பதவியேற்ற பின்பு, தேசத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இதுதவிர, நாட்டின் நன்மைக்காக இரவு பகலாக சிந்தித்து பாடுபடக்கூடியவர் பிரதமர் மோடி என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அந்த அளவிற்கு, இந்தியாவிற்கு தொடர்ந்து பெருமை சேர்த்து வருகிறார். கொரோனா எனும் பெரும் தொற்று உலக நாடுகளையே ரத்த கண்ணீர் வடிக்க வைத்தது. அச்சமயத்தில், வல்லரசு நாடுகள் முதல் வளரும் நாடுகள் வரை என்ன செய்வது என தெரியாமல் திணறியது. ஆனால், மோடி தலைமையிலான புதிய இந்தியா வல்லரசு நாடுகளை மட்டுமில்லாமல், பல ஏழை நாடுகளுக்கும் மருத்துவ உதவிகளை செய்து உயிர் இழப்புகளை வெகுவாக குறைத்தன. இதன் காரணமாக, உலக நாடுகளே இந்தியாவையும், இந்தியர்களையும் இன்று வரை புகழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் தான், ப்ளூ கிராஃப்ட் பவுண்டேஷன் என்கிற நிறுவனம் அம்பேத்கரும் மோடியும்: சிந்தினைவாதியும் செயல்வீரரும் என்கிற தலைப்பில் ஒரு புத்தகத்தை தயாரித்து தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ம் தேதி வெளியிட்டது. அந்தப் புத்தகத்திற்கு இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதி இருந்தார். அதில், அம்பேத்கருக்கு நிகரானவர் பிரதமர் மோடி என்று குறிப்பிட்டு, அதற்கு உதாரணமாக பெண்கள் முன்னேற்றம், முத்தலாக் தடைச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் குறிப்பிட்டிருந்தார். இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் மோடியை எப்படி? அம்பேத்கருடன் ஒப்பிடலாம் என்று தி.மு.க, காங்கிரஸ், வி.சி.க. சில்லறை போராளிகள் மற்றும் போலி சமூக ஆர்வலர்கள் வரை கதறி இருந்தனர். இதற்கு, இசைஞானி இளைய ராஜா பிரதமர் மோடியை புகழ்ந்தது புகழ்ந்தது தான் எனது கருத்தை திரும்ப பெற மாட்டேன் என உறுதிபட தெரிவித்து விட்டார்.
அந்த வகையில், இசைஞானி இளைய ராஜாவின் தம்பி கங்கை அமரன் பிரபல இணையதள ஊடகமான ஐ தமிழ் 24 /7க்கு நேர்காணல் ஒன்றினை அளித்திருந்தார். அப்பொழுது, நெறியாளர் அம்பேத்காருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு இளையராஜா பேசியது குறித்த கேள்வியினை எழுப்பினார். இதற்கு, கங்கை அமரன் கூறியதாவது; ஒரு அம்பேத்கார் கைகளால் அம்பேத்கார் விருது பெறும் முதல்வர் அம்பேத்காருக்கு எனது வாழ்த்து என்று பிரபல பாடலாசிரியர் கபிலன் பேசியதை மேற்கொள் காட்டி நெறியாளரிடம் கேள்வியை எழுப்பினார். அதற்கு, பதில் அளிக்க முடியாமல் நெறியாளர் திணறியதை பார்த்து கங்கை அமரன் ஆவேசமடைந்த காணொளி தான் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.