சுவாமி விவேகானந்தர் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் , விசுவநாத் தத்தா — புவனேஸ்வரி தேவி தம்பதிக்கு மகனாக, 1863 ஜனவரி 12ல் பிறந்தார். இந்து துறவி, ராமகிருஷ்ணர் மறைவிற்கு பின், 1886ல், விவேகானந்தரும், ராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். கொல்கத்தாவில் , ராமகிருஷ்ண இயக்கம் மற்றும் மடத்தை நிறுவினார், விவேகானந்தர்.
அமெரிக்காவின், சிகாகோவில், உலக சமய மாநாட்டில், அவர் ஆற்றிய சொற்பொழிவுக்கு, அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. விவேகானந்தர், நான்கு ஆண்டுகள், இந்திய துணைக் கண்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பயண முடிவில், 1892 டிசம்பர் 24ல், கன்னியாகுமரி வந்தடைந்தார். கடல் நடுவில் அமைந்துள்ள பாறை மீது, மூன்று நாட்கள் தங்கி, தியானம் செய்தார்.
கல்கத்தாவில் இராமகிருஷ்ண இயக்கம் மற்றும் மடத்தை நிறுவினார் சுவாமி விவேகானந்தர். 1899 சனவரி முதல் 1900 டிசம்பர் வரை இரண்டாம் முறையாக மேல்நாட்டுப் பயணம் மேற்கொண்டார்.
தன், 39வது வயதில், விவேகானந்தர், 1902 ஜூலை, 4ல், மேற்கு வங்க மாநிலம் பேலுாரில் காலமானார். அவர் நினைவு தினத்தில் அவரை வணங்குவோம்.