தலைவர்தான் கைதாகிட்டாருல்ல… எம்.ஆர்.பி. ரேட்டுக்கு குடுங்க… டாஸ்மாக் கடையில் குடிமகன் செய்த காமெடி..!

தலைவர்தான் கைதாகிட்டாருல்ல… எம்.ஆர்.பி. ரேட்டுக்கு குடுங்க… டாஸ்மாக் கடையில் குடிமகன் செய்த காமெடி..!

Share it if you like it

தலைவர்தான் கைதாகிட்டாருல்ல.. எம்.ஆர்.பி. ரேட்டுக்கு கொடுங்க என்று டாஸ்மாக் கடையில் மதுபானம் கேட்டு வாங்கும் குடிமகனின் வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, 28-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்ட நிலையில், தற்போது சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இருதயத்தில் 90 சதவிகிதம் அடைப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், 3 இடத்தில் அடைப்பு இருப்பதால் பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்ய பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், டாஸ்மாக் மதுபானக் கடைகளில் வழக்கம்போல குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதை வைத்து, அதான் அமைச்சரே உள்ளே போயிட்டாரே, யாருக்காகடா கூடுதலா வாங்குறீங்க என்று கேட்டு, நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை போட்டு கேலி, கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் அரசூர் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் குடிமகன் செய்த காரியம்தான் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, அரசூர் டாஸ்மாக் மதுக்கடைக்கு வந்த குடிமகனிடம் வழக்கம்போல விற்பனையாளர்கள் 10 ரூபாய் கூடுதலாகக் கேட்டிருக்கிறார். அதற்கு அந்த குடிமகன், தலைவர்தான் கைதாகிட்டாருல்ல.. எம்.ஆர்.பி. ரேட்டுக்கு கொடுங்கக் கூடாதா என்று கேட்டதோடு, பாருங்க மக்களே… தலைவர் கைதாகி இருக்கிறது. துக்கம் தாளாமல் மதுகுடிக்க வந்தால், 10 ரூபாய் கூடுதலாக கேட்கிறார்கள் என்று கூறுகிறார். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Share it if you like it