Share it if you like it
வீடுகளில் நாய், மாடு வளர்த்தால் ரூ.10 வரி செலுத்த வேண்டும் என்று மதுரை மாநகராட்சி இன்று அறிவித்துள்ளது. வீட்டு நாய் தெருவில் செல்லும் மற்றவர்களை அச்சுறுத்தும் பட்சத்தில் உரிமையாளருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மதுரை மாநகராட்சி கூறியுள்ளது.
மேலும் அனுமதிக்கப்படாத இடங்களில் விற்பனைக்காக ஆடு, மாடு வதை செய்தால், ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி வெளியிட்ட இந்த அறிவிப்பு பொது மக்கள், விவசாயிகள், மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கிராம புறங்களில் ஆடு, மாடு, மேய்த்து வரும் தாத்தாவின் கோவணத்தையும் விட்டு வைக்கவில்லையா? இந்த விடியல் அரசு என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Share it if you like it