ஒடிசா மாநிலம் பூரியில் உலக புகழ்பெற்ற ஜெகநாதர் கோவில் உள்ளது. இங்குள்ள மூலவர்கள் மரசிற்பங்களால் செய்யப்பட்டது. இன்னும் பயன்பாட்டில் உள்ள மிகப் பழமையான இந்துக் கோயில்களில் ஒன்றான இதன் முக்கிய ஆலயம் பத்தாம் நூற்றாண்டில் சோடகங்கா வம்சத்தைச் சேர்ந்த அனந்தவர்மனால் கட்டப்பட்டது. எவ்வாறாயினும், சன்னதியில் உள்ள தெய்வங்கள் மிகவும் பழமையானவை என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் கோவிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு தீவிரமாக அமல்படுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இ
இதுக்குறித்து கோவில் நிர்வாகம், கோவில் என்பது பொழுதுபோக்காக இடம் அல்ல. சிலர் அநாகரிகமாக ஆடை அணிந்து வருகின்றனர். கோவிலின் கண்ணியம், புனிதத்தை காப்பது பொறுப்பு. எனவே கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.