கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.பொருளாதார நிபுணர்கள் கணித்தபடி 29-ஆம் தேதி ஒரு சவரன் ஆபரண தங்கம் 59 ஆயிரத்து எட்டியுள்ள நிலையில் இன்னும் எவ்வளவு உயர்மோ? என்ற அச்சம் ஒரு புறம் இருக்க, தங்கம் ஏன் இவ்வளவு உயருகிறது என்ற கேள்வி எழுகிறது.தங்கத்தை ஒரு ஆபரணங்கள் தயாரிக்க்கும் ஒரு பொருஈள் அல்ல. தங்கத்தின் இருப்பை வைத்தே ஒரு நாட்டின் பொருளாதார பலம் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் தங்கத்தை ஒரு ஆபரண அணிகலன் பொருள் அணிகலனுக்கு தேவையான பொருள் என்று மட்டுமே நம்மால் எடுத்துக் கொள்ள முடியாது. அது முதலீடு சார்ந்த ஒரு அம்சமாகவும் உள்ளது. அந்த வகையில் தங்கத்தில் முதலீடு செய்யும் வழக்கம் உள்ள போதிலும், இந்தியா போன்ற நாடுகளிலேயே அந்த வழகம் அதிகமாக இருந்து வருகிறது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் சர்வதேச நாடுகளின் நிலையும் அப்படி மாறி, அவர்களது கவனமும் தங்கத்தை நோக்கி திரும்பி உள்ளது. இதற்குக் காரணம் மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம், பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள இழப்பு மற்றும் நிலையற்ற தன்மை உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தில் முதலீடு செய்வதை மக்கள் பாதுகாப்பாக கருதுகின்றனர். இதன் காரணமாகவே தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரமாக ஏழை எளிய மக்கள் அண்ணாந்து பார்க்கக்கூடிய நிலைக்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது.இந்த விலையேற்றம் காரணமாக இந்திய மக்கள் சிறுக, சிறுக சேமிக்கும் நிலை அதிகரித்துள்ளது.எப்படி சேர்த்தாலும் தங்கம், தங்கம் தான் அதன் மதிப்பும் சிறப்பும் மாறாது.
