45 வது செஸ் ஒலிம்பிக் போட்டியானது ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகரில் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மொத்தமாக 1884 போட்டியாளர்கள் பங்கு பெற்றதாக கூறப்படுகிறது.
ஓபன் பிரிவில் 197 அணிகளும் மகளிர் பிரிவில் 183 அணிகளும் விளையாடியது. இதில் 11-வது சுற்று போட்டிகள் நேற்று நடைபெற்றது. இந்தநிலையில் இந்திய அணி வீரர்கள் மிகவும் அபாரமாக விளையாடி அசத்தியுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த குகேஷ், பிராக்யானந்தா மற்றும் அர்ஜுன் ஆகியோர் தாங்கள் விளையாடிய போட்டிகளில் வெற்றியை பெற்றனர். அதேபோன்று மற்றொரு இந்திய வீரரான விவித், தான் விளையாடிய போட்டியில் டிரா செய்தார். இதன் மூலம் 11 ஆவது பிரிவில் மூன்று புள்ளி ஐந்து- ஜீரோ புள்ளி ஐந்து என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
இதே போன்று, மகளிர் பிரிவில் இந்திய குழு அஸர்பைஜான் அணியை எதிர்கொண்டது. இதில் ஹரிக்கா,திவ்யா, வனிதா ஆகியோர் வெற்றியைப் பெற வைஷாலி ட்ரா செய்தார். இதன் மூலம் மகளிர் பிரிவில் அசர்பைஜான் அணியை 3.5க்கு 0.5 என்ற கணக்கில் இந்தியா வெற்றியை கைப்பற்றி இந்திய மகளிர் அணியும் தங்க பதக்கத்தை வென்றது. இதன் மூலம் செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இந்தியா ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது. இதேபோன்று இந்திய வீரர்கள் முகேஷ், அர்ஜுன் திவ்யா மற்றும் வந்திகா ஆகியோர் தனி நபர் பிரிவில் தங்கத்தை கைப்பற்றினர்.
இதன் மூலம் மகளிர் பிரிவில் 19/ 22 என்ற கணக்கில் புள்ளிகளை கைப்பற்றி இந்திய மகளிர் அணியும் தங்க பதக்கத்தை வென்றது. இதன் மூலம் செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இந்தியா ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது. இதேபோன்று இந்திய வீரர்கள் முகேஷ், அர்ஜுன் திவ்யா மற்றும் வந்திகா ஆகியோர் தனி நபர் பிரிவில் தங்கத்தை கைப்பற்றினர்.
ஒலிம்பியாட் வரலாற்றில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய அணி வீரர்களை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில்,
இந்தியா பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைகிறது!
45வது FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நமது இந்திய செஸ் அணி வெற்றி பெற்றதால் இந்தியாவுக்கு இது ஒரு வரலாற்று வெற்றி ! செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா தங்கம் வென்றுள்ளது ! நமது திறமை வாய்ந்த இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த குறிப்பிடத்தக்க சாதனை இந்தியாவின் விளையாட்டுப் பாதையில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. இந்த வெற்றியானது, செஸ் ஆர்வலர்களின் தலைமுறைகளை விளையாட்டில் சிறந்து விளங்க ஊக்குவிக்கட்டும். இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவரும் (FIDE), இந்தியாவின் கிராண்ட் மாஸ்டருமான விஸ்வநாதன் ஆனந்த் அவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் குறிப்பிட்டிருப்பதாவது :-
அர்ஜுன் மற்றும் குகேஷ் ஆகிய இருவரும் மிகவும் கவனத்தை ஈர்த்துள்ளனர். செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இது சிறந்த செஸ் நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். மிகப்பெரிய சாதனையை இந்தியா படைத்துள்ளது. ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் தங்கப்பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.