குடித்து விட்டு நடுரோட்டில் தூங்கிய குடிமகன் குறித்து விவரிக்கிறது இக்காணொளி.
தமிழகத்தில் குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. அந்தவகையில், சமூக சீர்கேடு, சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர் கதையாக இருந்து வருகிறது.
சமுதாயத்தில் நிகழும் பெரும்பாலான குற்றங்களுக்கு மதுவே மிக முக்கிய காரணம் என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. இதுதவிர, குடிமகன் செய்யும் அலப்பறைகள் கொஞ்சம் நஞ்சமல்ல என்பதே நிதர்சனம். இப்படிப்பட்ட சூழலில் தான்,
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த குடிமகன் ஒருவர் போதை தலைக்கு ஏறிய களைப்பில் போக்குவரத்து மிகுந்த சாலையில் உறங்கியுள்ளார். இக்காட்சியினை, வேடிக்கை பார்த்தவாறே பொதுமக்கள் நகர்ந்துள்ளனர். பால் குடித்து விட்டு ரோட்டில் உறங்கிய அரசாங்க குழந்தையை யாரும் எழுப்ப முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.