பஸ்ஸில் பயணித்த குடிமகன் ஒருவர், செய்கையிலேயே பஸ் ஓட்டுவது போன்ற காணொளி தற்பொழுது வைரலாகி வருகிறது.
பிரபல நடிகர் ஷ்யாம் நடித்த ஏபிசிடி திரைப்படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி இருக்கிறது. அதில், நடிகர் வடிவேலு கண்டக்டராக நடித்திருப்பார். வடிவேலு இருக்கும் அரசு பேருந்து திடீரென நடுவழியில் நின்று விடும். இதையடுத்து, அனைவரும் கீழே இறங்கி பஸ்ஸை தள்ளுங்கள் என்று கூறுவார். உடனே, பஸ்ஸில் இருக்கும் ஆண் பயணிகள் எல்லோரும் கீழே இறங்கி தள்ளுவார்கள். அப்பேருந்தில், பயணம் செய்த ஒருவர் மட்டும் பஸ்ஸை தொடாமலே ‘ஆ தள்ளு தள்ளு’ என்று கூறுவது போல அக்காட்சி அமைந்திருக்கும். இந்த நகைச்சுவை காட்சியை இன்றும் யூடியூப்பில் காண முடியும். இந்த நகைச்சுவை காட்சியை மையமாக வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ்கள் வாயிலாக அரசு பேருந்துகளை கிண்டல் செய்து வருகின்றனர். அந்தவகையில், அரசுப் பேருந்தில் பயணம் மேற்கொண்ட குடிமகன் ஒருவர் தனது இருக்கையில் அமர்ந்து கொண்டு பஸ் ஓட்டுவது போன்று செய்கை செய்த காணொளி பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.
அதன் லிங்க் இதோ.
