கிழிந்த டயருடன் 15 கிலோ மீட்டர் தூரம் சென்ற அரசு பேருந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காணொளி!
ஏழை எளியவர்கள் மற்றும் நடுத்தர மக்கள் தங்கள் ஊர்களுக்கு பயணம் செய்ய விரும்பினால், அவர்களின் தேர்வாக இருப்பது ஒன்று ரயில் அல்லது அரசு பேருந்தாக மட்டுமே இருக்கும். எப்பொழுது சென்றாலும் தங்கள் ஊர்களுக்கு செல்ல பஸ் இருப்பதால் பெரும்பாலான மக்கள் அரசு பேருந்துகளை மட்டுமே முழுக்க முழுக்க நம்பியுள்ளனர். அந்த வகையில், பேருந்தில் பயணம் செய்யும் மக்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு அரசின் கடமை. தி.மு.க ஆட்சி அமைந்த பின்பு, தமிழக போக்குவரத்து துறையில் பலமுறைகேடு நடப்பதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, கடந்த 5 மாதங்களாக தி.மு.க ஆட்சியில் டயர் வாங்க நேரமில்லை ஆனால் ஸ்வீட் பாக்ஸ் வாங்க ரூ.100 கோடி கம்பெனியிடம் டென்டர் விட நேரம் இருக்கிறதா? என்று தமிழக அரசிற்கு பிரபல அரசியல் விமர்சகர் செல்வ குமார் கடந்த ஆண்டு கேள்வி எழுப்பி இருந்தார். அதே போல, கடந்த ஆண்டு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மாரநாடு பகுதியிலிருந்து, மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த நகர்ப்பேருந்து, திருப்புவனம் சந்தை திடல் பேருந்து நிலையம் அருகில் வரும் போது பேருந்தின் இடது பக்கம் உள்ள முன் சக்கரம் திடீரென்று தனியாக கழன்று ஓடிய காணொளியை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும்.
இந்த நிலையில் தான், சேலம் கோட்டம் தர்மபுரி மண்டலத்திற்கு உட்பட்ட பணிமனை கட்டுப்பாட்டில் இயங்கும் நகர பேருந்து ஒன்று திருப்பத்தூரில் இருந்து நாற்றம் பள்ளி தொட்டி கிணறு வரை தினமும் இயக்கப்படுகிறது. வழக்கம் போல, இப்பேருந்து இயக்கப்படும் பொழுது பின்பக்க டயர் திடீரென வெடித்துள்ளது. இதையடுத்து, 15 கி.மீட்டர் கிழிந்த டயருடன் அந்த பேருந்து பயணம் செல்லும் சூழல் ஏற்பட்டதாக பிரபல ஊடகமான பாலிமர் செய்தியாக வெளியிட்டுள்ளது.
அதன் லிங்க் இதோ.