தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் 15.09.2022 அன்று மதுரை அரசுப் பள்ளியில் (CMBFS) வரலாற்றுச் சிறப்புமிக்க காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகர்ப்புற நிர்வாகம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், பள்ளிக்கல்வித் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை ஆகிய துறைகளின் அலுவலர்களை கொண்ட மாநில, மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, இத்திட்டம் கண்காணிக்கப்படும் என்று கூறியிருந்தனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏனாதிகோட்டை ஊராட்சியில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. நேற்று பள்ளியில் காலை உணவாக மாணவ, மாணவியர்களுக்கு சேமியா உப்புமா மற்றும் சாம்பார் வழங்கப்பட்டது.
ஆனால் உணவு சாப்பிட்டதில், 9 மாணவ, மாணவியருக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, வயிற்று வலியால் துடித்துள்ளனர். இவர்களை உடனடியாக, ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்த நிலையில் இது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகர்ப்புற நிர்வாகம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், பள்ளிக்கல்வித் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை ஆகிய துறைகளின் அலுவலர்களை கொண்ட மாநில, மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான கண்காணிப்புக் என இத்தனை குழுக்களின் கண்காணிப்பு இருந்தும் இவ்வாறு எப்படி நடந்துள்ளது ? இத்தனை நிர்வாகமும் ஏன் கவனக்குறைவாக செயல்படுகிறது என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் சில அரசு பள்ளிகளில் காலை உணவு சரியில்லை என்று மாணவர்கள் உணவை குப்பை தொட்டியில் கொட்டிய புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
source ; maalaimurasu