கரூர் மாவட்டத்தில், கடந்த 2022-2023 -ம் ஆண்டில், ஒன்றை இலக்கத்தோடு 44 அரசு பள்ளிகள் மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில், தற்போது, அவை 73 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், நெடுங்கூர் மற்றும் வெங்கடாபுரம் தொடக்கப் பள்ளிகளில் கல்வி பயில ஒரு மாணவர் கூட முன்வராததால், அப்பள்ளிகள் மூடப்பட்டன. அங்கு பணியாற்றிய ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டனர்.
மாணவர்கள் தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்வதால், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருவதாக புகார் எழுந்துள்ளது. எனவே, “தனியார் பள்ளிகள் தரத்துக்கு அரசு பள்ளிகளை தரம் உயர்த்தினால் மட்டுமே மாணவர் சேர்க்கை உயரும்” என மாணவர்களின் பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.