திருவாரூர் வடக்கு வீதி முருகன் கோவிலை இடிக்க திமுக அரசாங்கத்தின் மாநில நெடுஞ்சாலை துறை தீவிரம் காட்டி வருவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டை வைத்துள்ளது.
மேலும் திருக்கோவிலை சாலை விரிவாக்க பணி என்று எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி, இடிக்க வேண்டி கருவறையில் மார்க்கிங் செய்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
கோவிலைக் காக்க மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கோட்ட பொறியாளர் நெடுஞ்சாலை துறை அனைவரையும் சந்தித்து இந்து முன்னணி சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் பல ஆண்டுகளாக வழிபாட்டில் இருந்த விநாயகர் ஆலயத்தை சில மாதங்களுக்கு முன்பு ஆணையராக பொறுப்பேற்ற ஜஹாங்கீர்பாட்ஷா அவர்கள் வழிபாட்டிற்கு தடை விதித்து உள்ளதாக கூறப்படுகிறது.
அவரின் உத்தரவின் பெயரில் ஆலயம் பூட்டப்பட்டு வழிபாடு இன்றி, பாழடைந்து காணப்படுகிறது என்ற தகவல் அறிந்த இந்து முன்னணியினர் நகராட்சி அலுவலகம் சென்று விநாயகர் ஆலயத்தை பார்வையிட்டு
அதிகாரிகளிடம் விரைந்து விநாயகர் கோவிலில் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இல்லையெனில், இந்துமுன்னணி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துவர்கள் ஜெருசலம் செல்வதற்கும், இஸ்லாமியர்கள் மெக்கா செல்வதற்கும் அரசு மானியமாக கொடுக்கிறது. ஆனால் ஹிந்து கோவில்களில் மட்டும் தரிசனத்திற்காக பக்தர்களிடம் பணம் வசூலிக்கிறது.இது எந்த விதத்தில் நியாயம் ?
ஹிந்து கோவில்களை தொடர்ந்து இடித்து வரும் திமுக அரசை கண்டித்து அனைத்து மாவட்ட ஒன்றிய தலைநகரங்களில் இந்து முன்னணியின் மாநிலம் தழுவிய ஜூலை ஆர்ப்பாட்டம் ஜூலை 21, ஞாயிற்றுக்கிழமை நாளை நடைபெறுவதாக அறிவித்துள்ளது.
மெக்கா, ஜெருசலேத்துக்கு அரசு மானியம் : கோவிலுக்கு மட்டும் கட்டணமா ?