அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்(ABVP) தேசிய மாணவர் அமைப்பினர் தமிழக ஆளுநர் R.N.ரவி அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர் அதில் பின்வருமாறு :-
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்(ABVP) தேசிய மாணவர் அமைப்பு நாடு முழுவதும் பல்வேறு விதமான ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வருகிறது இச்சந்திப்பின்போது, தமிழகத்தில் தற்போது இருந்து வரும் கல்வி சூழ்நிலை குறித்தும் தமிழகத்தை ஆட்சி செய்கின்ற ஆட்சியாளர்களின் கல்வி விரோத போக்கினை குறித்தும் தமிழக மாணவர்கள் தொடர்ந்து சந்தித்து வரக்கூடிய மன அழுத்தம் மற்றும் தற்கொலைகள் குறித்தும் கலந்துரையாடல் நடைபெற்றது
தேசிய கல்வி கொள்கையை தமிழகத்தில் உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை தேவை என மாநில அரசு பல்கலைக்கழகங்களின் கோரிக்கை வைக்கப்பட்டது. தரத்தை மேம்படுத்தவும், பல்கலைக்கழகத்தில் படிக்க கூடிய மாணவர்களுக்கு தரமான கல்வியை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மது மற்றும் போதைப் பொருள்களின் பயன்பாடு அனைத்து கல்வி நிலையங்களிலும் குறிப்பாக பல்கலைக்கழகங்களிலும் மாணவர் விடுதிகளிலும் பள்ளி மாணவர்களிடம் கூட சகஜமாக புழக்கத்தில் உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் மது போதை பொருளுக்கு அடிமையாகி தங்களது சுய சிந்தனையை இழக்க நேரிடுகிறது கல்வி நிலையங்களில் மது மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் ABVP கேட்டுக்கொள்கிறது.
சமீபத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இந்திய தேசியக் கொடியை எடுத்துச் செல்ல அனுமதி மறுத்து பெருமைமிகு தேசியக் கொடியை குப்பைத் தொட்டியில் தமிழக காவல் துறை இணை ஆய்வாளர் வீசிய செயலை ABVP வன்மையாக தொடர்ச்சியாக தேசியத்திற்கு எதிரான ஒரு கண்டிக்கிறது எதிரான ஒரு சூழலை தமிழக அரசு மக்களிடையேயும் மாணவர்களையும் உருவாக்கி வருகிறதோ என்கின்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது தமிழகத்தில் இருக்க கூடிய மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென ABVP சார்பாக வலியுறுத்தி கேட்டுகொள்ளப்பட்டது
தமிழகத்தின் மரியாதைக்குரிய மேதகு ஆளுநர் உயர்திரு R.N.ரவி அவர்களை ABVP -யின் தேசிய செயலாக்க குழு உறுப்பினர் ஸ்ரீ முத்துராமலிங்கம் அவர்கள் மற்றும் தென் தமிழக மாநில துணை தலைவர் ஸ்ரீ ஜெயசந்திரன் அவர்கள் மற்றும் தென் தமிழக மாநில இணை செயலாளர்கள் ஸ்ரீ ஹரிகிருஷ்ண குமார் மற்றும் சூரியா மற்றும் செல்வி ஜெயபிரியா அவர்கள் சந்தித்தனர்.