அக்ஷய பாத்ரா அறக்கட்டளை என்பது பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட இந்தியாவில் உள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகும். அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தி வகுப்பறை பசியை போக்க இந்த அமைப்பு பாடுபடுகிறது. அதோடு, அக்ஷய பத்ரா ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்வதையும், சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழந்தைகளுக்கான கல்வி உரிமையை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2000 ஆம் ஆண்டு முதல் அக்ஷய பாத்ரா ஒவ்வொரு பள்ளி நாளிலும் குழந்தைகளுக்கு புதிய மற்றும் சத்தான உணவை வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் ஒருங்கிணைத்து வருகிறது. உலகம் முழுவதிலுமிருந்து ஆர்வமுள்ள பார்வையாளர்களை இந்த தன்னார்வ அமைப்பானது ஈர்த்துள்ளது.
இதுதொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டிருப்பதாவது :-
“நான்கு பில்லியன் பேருக்கு இலவச உணவை வழங்கி அற்புதமான மைல்கல்லை எட்டியதற்காக அக்ஷய பாத்ரா அறக்கட்டளை முழு குழுவிற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர்களுக்கு கிடைத்துள்ள
UN அங்கீகாரம் மிகவும் தகுதியானது. (UN குறி என்பது ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்ட உலகளாவிய/சர்வதேச அமைப்பாகும்). அக்ஷய பாத்ராவின் அணுகுமுறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் மனிதகுலத்தின் ஊட்டச்சத்து பிரச்னையை தீர்க்கும் ஒரு புதுமையான வழியாகும். சென்னையில் ஏற்கெனவே நவீன சமையலறையை கட்டியுள்ள அக்ஷய பாத்ரா ஃபவுண்டேஷன், பல ஆயிரம் ஏழை குழந்தைகளுக்குப் பயன்படும் வகையில், தனது இலவச உணவு வழங்கல் சேவையை விரைவில் தொடங்கும் என நம்புகிறேன்.” – ஆளுநர் ரவி