கோயில் பாதுகாப்பிலும் பக்தர்களின் பாதுகாப்பிலும் அறநிலையத்துறை அக்கறை காட்டுவதில்லை கோவிலை வருவாய் ஈட்டும் வணிக மையமாகவே அறநிலையத்துறையும் அரசும் கருதுகிறது என்று இந்து முன்னணி குற்றச்சாட்டை வைத்துள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில்,
சென்னை திருவொற்றியூர் காலடி பேட்டையில் 400 ஆண்டுகள் பழமையான கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோயில் உள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ராஜகோபுர பணி ஆமை வேகத்தில் நடந்து வருவதால் வருஷா வருஷம் வைகாசி மாதத்தில் நடத்தபட வேண்டிய பிரம்மோற்சவம் கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்படவில்லை, இந்நிலையில் இந்தாண்டு வைகாசி பிரம்மோர்சவத்தின் போது பெருமளை கருட வாகனத்தில் எழுந்தருள செய்யும்போது கருட வாகன பல்லக்கின் தண்டு உடைந்து சுவாமி திருமேனி சாய்ந்துள்ளது.
ராஜகோபுர திருப்பணி 15 வருஷங்களுக்கும் மேலாக முடிக்கப்படாமல் இருப்பதும் வருஷா வருஷம் நடத்தவேண்டிய வைகாசி பிரம்மோற்சவம் நடத்தப்படாமல் விடுபட்டதும் கண்டிக்கதக்கது,
தேரோட்டத்தின் போது தேர்க்கால் உடைவதும் மின் விபத்து ஏற்படுவதும் தொடர்கதையாக மாறியுள்ளது, திருத்தேர் மற்றும் சுவாமி வாகனங்களை முறையாக பராமரிக்காததும், புதுபிக்காததுமே தொடர்ச்சியான அசம்பாவிதங்களுக்கு காரணமாகிறது,
இந்து சமய அறநிலையத்துறை கோயில்களை பரமாரிப்பதிலும் பாதுகாப்பதிலும் தோல்வி அடைந்துவிட்டது. கோயில் பாதுகாப்பிலும் பக்தர்களின் பாதுகாப்பிலும் அறநிலையத்துறை அக்கறை காட்டுவதில்லை கோவிலை வருவாய் ஈட்டும் வணிக மையமாகவே அறநிலையத்துறையும் அரசும் கருதுகிறது.
அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் அலட்சியமும் செயலற்ற தன்மையும் கோவில் விழாக்கள் மீது காட்டும் பாராமுகமும் இந்த சம்பவம் மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது, எத்தனை தரம் சுட்டிக் காட்டினாலும் இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்து தவறிழைத்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறை தோற்றுப்போன செயலிழந்த துறையாக இருந்து வருகிறது, எனவே அரசும் அறநிலையத்துறையும் ஆலயங்களை விட்டு வெளியேற வேண்டும்.