குஜராத் மாநிலத்தில் நேரிட்ட தொங்கு பால விபத்து திட்டமிட்ட சதி என்று கூறப்படுகிறது. சில சமூக விரோதிகள் பாலத்தை காலால் எட்டி உதைத்தும், கைகளால் இழுத்தும், தாவிக்குதித்தும் அட்டகாசம் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
குஜராத் மாநிலம் மோர்பி நகராட்சியில் உள்ள மச்சு ஆற்றின் மீது தொங்கு பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 19-ம் நூற்றாண்டு அமைக்கப்பட்ட இந்த தொங்கு பாலத்தில், கடந்த 7 மாதங்களாக பராமரிப்பு பணிகள் நடந்து வந்தது. பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 26-ம் தேதி பாலம் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது. இந்த சூழலில், நேற்று விடுமுறை தினம் என்பதால், 400-க்கும் மேற்பட்டோர் பாலத்தில் குவிந்தனர். ஆனால், இந்த பாலத்தில் ஒரே நேரத்தில் 100 பேர் மட்டுமே பார்வையிட முடியும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாரம் தாங்காமல் இரவு சுமார் 7 மணியளவில் பாலம் திடீரென அறுந்து விழுந்தது. இதில், பாலத்தில் நின்று கொண்டிருந்த 400 பேரும் ஆற்றுக்குள் விழுந்தனர். இவர்களில் சிலர் பாலத்தின் கயிறுகளை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தனர். சிலர், ஆற்றுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்தனர். தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், ராணுவத்தின் முப்படையினரும் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். எனினும், ஆற்றில் மூழ்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டதாகக் கூறப்படுகிறது. 177 பேர் உயிருடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மீதி பேரை தேடும் பணி நடந்து வருகிறது.
இதனிடையே, பாலத்தின் சீரமைப்புப் பணியை மேற்கொண்ட தனியார் நிறுவனம் நகராட்சியிடம் தகுதிச் சான்றிதழ் வாங்காமல் பாலத்தை திறந்ததாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அதேசமயம், பாலம் அறுந்து விழுந்ததில் திட்டமிட்ட சதி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது, குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து பா.ஜ.க. வெற்றிபெற்று வரும் நிலையில், அக்கட்சிக்கும், ஆட்சிக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில், எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு சதி செய்து பாலத்தை தகர்த்ததாகக் கூறப்படுகிறது.
இதை மெய்ப்பிக்கும் வகையில், வீடியோ காட்சிகள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, பாலத்தில் குவிந்த இளைஞர்கள் பட்டாளம், ஒரு குறிப்பிட்ட பகுதியில் நின்று கொண்டு, பாலத்தில் கட்டப்பட்டிருந்த இணைப்புக் கயிறுகளை காலால் எட்டி உதைத்தும், கைகளால் இழுத்தும், தாவிக்குதித்தும் அட்டகாசம் செய்வது தெள்ளத்தெளிவாக பதிவாகி இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி குஜராத்தில் தீவிர பிரசாரம் செய்து வருகிறது. அக்கட்சிக்கு காலிஸ்தான் பயங்கரவாதிகள் ஆதரவு இருப்பதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருக்கிறது. ஆகவே, காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் மூலம் பாலம் திட்டமிட்டு தகர்க்கப்பட்டதா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. தொடர் விசாரணையில் இதுகுறித்த விவரம் அம்பலமாகும் என்று எதிர்பார்க்கலாம்.