யார் இந்த தீஸ்தா செதல்வாட்… மோடிக்கு எதிராக செய்த சதி என்ன?

யார் இந்த தீஸ்தா செதல்வாட்… மோடிக்கு எதிராக செய்த சதி என்ன?

Share it if you like it

தற்போது எதிர்க்கட்சிகளால் அதிகமாக உச்சரிக்கப்படும் பெயர் தீஸ்தா செதல்வாட். காரணம், இவரது கைது விவகாரம்தான். யார் இந்த தீஸ்தா செதல்வாட்? இக்கட்டுரையில் பார்ப்போம்!

இதுகுறித்து மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், “மும்பையின் மிகவும் ஆடம்பரமான பகுதியான ஜூஹூ சாலையில், அமிதாப் பச்சன் பங்களாவுக்கு அருகில் இருக்கிறது “நிரந்த்” என்கிற பங்களா. இந்த பங்களா, அமிதாப்பின் பங்களாவை விட 3 மடங்கு பெரியது. இதன் இன்றைய மதிப்பு 500 கோடி ரூபாய். இந்த பங்களா யாருடையது தெரியுமா? சாட்சாத் சமூக ஆர்வலர் என்று சொல்லப்படும் இதே தீஸ்தா செதல்வாட்டுக்கு சொந்தமானதுதான். ஒரு சாதாரண சமூக ஆர்வலருக்கு இவ்வளவு பெரிய பங்களா வாங்கும் அளவுக்கு எப்படி பணம் வந்தது? 1993-ம் ஆண்டு பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய தீஸ்தா, பிற்காலத்தில் ஜாவேத் ஆனந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரத்திற்கு மாநில அரசுதான் காரணம் என்று சொல்லி மோடி அரசுக்கு எதிராக நிறைய வழக்குகளை தாக்கல் செய்தார். அதாவது, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு, அகமதாபாத்தில் முஸ்லிம் அதிகம் வசிக்கும் பகுதியை ஹிந்து கும்பல் எரித்தது. இச்சம்பவத்தில் காங்கிரஸ் எம்.பி. எஹ்சான் ஜாஃப்ரி உட்பட 69 பேர் உயிரிழந்தனர். இவரது மனைவி ஜாகியா ஜாஃப்ரி தப்பினார்.

இந்த காலகட்டத்தில் 2004-ல் மத்தியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ், மோடியை முடக்கிப் போட பிளான் போட்டது. இதற்காக 5 பேர் கொண்ட குழு ஒன்றையும் அமைத்தது. போலீஸ் உயர் அதிகாரிகள் ஸ்ரீகுமார், சஞ்சீவ் பட், முகுல் சின்ஹா, ராணா அயூப் (பத்திரிகையாளர்) ஆகியோர் கொண்ட இக்குழுவில் தீஸ்தாவும் அடக்கம். இந்த ஸ்ரீகுமார்தான் 1995-ல் விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளியவர். இவர்கள் 3 வழிகளில் மோடியை முடக்க நினைத்தனர். ஒன்று, மீடியாக்கள் வாயிலாக மோடிக்கு எதிராக தொடர்ந்து செய்தி வெளியிடுதல், இரண்டாவதாக, இவ்வழக்கு குஜராத் நீதிமன்றத்தில் நடந்தால் நியாயமான முறையில் விசாரணை இருக்காது என்று கூறி உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றுவது, மூன்றாவது, உச்ச நீதிமன்றத்தின் மூலம் மோடியை குற்றவாளி என்று அறிவிக்க வைத்து சிறையில் தள்ளி, அவரது அரசியல் வாழ்க்கையை அஸ்தமனமாக்குவது. அதன்படி, 2002-ம் ஆண்டு முதல், ராணா அயூப் மூலம் ராஜ்தீப், பர்கா, சகாரிகா, என்.டி.டி.வி. உள்ளிட்ட இடதுசாரி ஊடகங்களின் வாயிலாக குஜராத் கலவரம் மற்றும் மோடியை அரக்கனாகக் காட்டி தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்தன.

இதையடுத்து, உயிரிழந்த காங்கிரஸ் எம்.பி. எஹ்ரான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி மூலம் 2006 ஜூன் மாதம் மோடி மற்றும் ஷா உட்பட 63 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் தீஸ்தா. இதற்காக பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை அழைத்து வந்து போலியாக புகார் கொடுக்க வைத்து எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வைத்தார். மேலும், மேற்படி முஸ்லிம் மக்களிடமிருந்து மிகப்பெரிய தொகையை வசூலித்தார். இப்படி 100 போலி புகார்கள், போலி FIRகள் பதிவு செய்யப்பட்டன. பிறகு, ஜாகியாவிடமும் எழுத்துப்பூர்வ புகாரை வாங்க போலீஸார் வந்தனர். அதற்கு ஜாகியாவோ, மோடிக்கு எதிராக காவல்துறை எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யும்வரை எழுத்துப்பூர்வ புகார் கொடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். போலீஸாரும் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யவில்லை. காரணம், தீஸ்தாவின் பிளான்தான். அதாவது, உச்ச நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக போடப்பட்ட பிளான். பின்னர், தங்களது பிளான்படி 2007-ம் ஆண்டு மார்ச் மாதம் குஜராத் நீதிமன்றத்திற்குச் சென்ற தீஸ்தா, போலீஸார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யவில்லை என்று கூறினார். ஆனால், ஜாகியாவின் எழுத்துப்பூர்வ புகார் இல்லாமல் காவல்துறை எப்படி எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய முடியும் என்று உயர் நீதிமன்றம் கேட்டது.

எனவே, அடுத்த பிளான்படி 2007 டிசம்பரில் உச்ச நீதிமன்றத்தை அணுகிய தீஸ்தா, உயர் நீதிமன்றம் தங்களுக்கு கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை என்று சொல்லி முறையிட்டார். இதுபோன்ற மோடிக்கு எதிரான செயல்பாடுகளை தீஸ்தா தீவிரமாக முன்னெடுத்ததால், அவருக்கு 2007-ம் ஆண்டு பத்மஸ்ரீ பட்டத்தை வழங்கி அழகு பார்த்தது காங்கிரஸ் அரசு. தொடர்ந்து, 2008-ல் காங்கிரஸ் தலைமையால் உச்ச நீதிமன்ற நீதிபதியா நியமிக்கப்பட்ட அஃப்தாப் அஸ்லம், குஜராத் கலவரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க ஒரு சிறப்புக் குழுவை (எஸ்.ஐ.டி.) நியமித்தார். இதில் ஹைலைட் என்னவென்றால், இந்த குழு உறுப்பினர்களை தேர்வு செய்ததே தீஸ்தாதான். இக்குகுழுவில் உறுப்பினராக இருந்த சஞ்சீவ் பட் ஐ.பி.எஸ். நீதிமன்றத்தில் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில், ‘குஜராத் கலவரத்தின் பின்னணியில் மோடி இருக்கிறார். 2002 பிப்ரவரி 27-ம் தேதி நடந்த கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு, ஹிந்துக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று தூண்டிவிட்டார் என்று கூறியிருந்தார். இதையடுத்து, நீதிபதி அஃப்தாப் அஸ்லாம் மேலும் இரண்டு அமிகஸ் க்யூரிகளை நியமித்தார். இந்த 2 பேர் யார் தெரியுமா? ஒருவர் பிரசாந்த் பூஷன், மற்றொருவர் ராஜு ராமச்சந்திரன். இருவருமே தீவிர இடதுசாரிகள் மற்றும் மோடி வெறுப்பாளர்கள். தவிர, மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளியான பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு ஆதரவாக வாதாடியவர் ராஜு ராமச்சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை தேர்வு செய்ததும் தீஸ்தாதான்.

இதனிடையே, சிறப்புக் குழுவின் தலைவராக முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் ஆர்.கே.ராகவன் நியமிக்கப்பட்டார். இவர், தீஸ்தா மற்றும் அவரது சிறப்புக் குழுவின் அனைத்து மோசடி திட்டங்களையும் அழித்தார். ராகவன் நேர்மையான நபர் என்பதோடு, தீவிர ஹிந்து மத பற்றாளர். இதன் பிறகு விசாரணையை தொடங்கி ராகவன், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளை விசாரித்தார். அப்போது, இவர்களில் பெரும்பாலானோர் தீஸ்தாவால் போலியாக் சேர்க்கப்பட்டவர்கள் என்பதை கண்டறிந்தார். மேலும், மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரிடமும் ராகவன் தலைமையிலான சிறப்புக் குழுவினர் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, 2010 நவம்பர் மாதம் தங்களது அறிக்கையை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையில் குஜராத் கலவரத்தின் பின்னணியில் மோடி இருந்ததற்கான எந்த ஆதாரமும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று சிறப்புக் குழு கூறியிருந்தது. எனினும், இந்த அறிக்கை திருப்திகரமாக இல்லை என்று கருத்துத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், அமிகஸ் க்யூரியை குஜராத் சென்று அறிக்கையின் நம்பகத்தன்மையை சரிபார்க்குமாறு கேட்டுக் கொண்டது. பிறகு, அமிகஸ் க்யூரி ராமச்சந்திரன், பிரசாந்த் பூஷன் ஆகியோர் குஜராத் சென்று விசாரித்து, மோடி மீது வழக்குத் தொடர வேண்டும் என்று அறிக்கை கொடுத்தனர்.

இப்படி, மோடிக்கு எதிராக தங்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று எஸ்.ஐ.டி.யும், மோடிக்கு எதிரான ஆதாரங்கள் இருப்பதாக அமிகஸ் க்யூரியும் தொடர்ந்து கூறி வந்தன. பின்னர் நடந்த விசாரணையில், குஜராத்தில் நடந்த கூட்டத்தில் மோடி இருப்பதாக அமிகஸ் க்யூரியிடம் சஞ்சீவ் பட் ஐ.பி.எஸ். சொன்னது பொய் என்பது தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக, எஸ்.ஐ.டி. தனது இறுதி அறிக்கையை 2012 பிப்ரவரி 8-ம் தேதி தாக்கல் செய்தது. அதன்படி, மோடிக்கு எதிராக எந்த ஆதாரத்தையும் எஸ்ஐ.டி. கண்டுபிடிக்கவில்லை என்றும், விசாரணையை முடிக்குமாறும் 2012 ஏப்ரல் 10-ம் தேதி விசாரணை நீதிமன்றம் பரிந்துரைத்தது. மேலும், மோடியை சிக்க வைக்க தீஸ்தா போலி புகார்களை அளித்ததாகவும் எஸ்.ஐ.டி. தெரிவித்திருந்தது. இதன் பிறகே, உச்ச நீதிமன்றம் மோடிக்கு க்ளீன் சிட் வழங்கியது, வழக்கும் முடிந்தது, ஆனாலும் தீஸ்தா விடவில்லை. ஜாகியா வழியாக உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில்தான் கடந்த 24-ம் தேதி உச்ச நீதிமன்றம், குஜராத் கலவர வழக்கில் பிரதமர் மோடிக்கு எஸ்ஐ.டி. வழங்கிய க்ளீன் சிட்டை உறுதி செய்தது. மேலும், சமூக ​​ஆர்வலர் தீஸ்தா செடல்வாட், மனுதாரரான ஜாகியா ஜாஃப்ரியின் உணர்ச்சிகளை “துரோக நோக்கங்களுக்காக” பயன்படுத்திக் கொண்டதாக குறிப்பிட்ட நீதிமன்றம், தீஸ்தா மீது விசாரணை தேவை என்றும் கூறியது. இதைத் தொடர்ந்தே, குஜராத் ஏ.டி.எஸ். அதிகாரிகளால் தீஸ்தா நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். மேலும், பணம் வசூலித்தது தொடர்பான நிதி முறைகேடு குற்றச்சாட்டையும் எதிர்கொண்டிருக்கிறார்” என்றார்.

ஆக, தான் பின்னிய வலையில் தானே விழுந்திருக்கிறார் தீஸ்தா. ஆனால், இவர் ஏதோ போராளியைப் போல சித்தரித்து வருகிறார்கள் இடதுசாரிகளும், சில ஊடகங்களும்.


Share it if you like it