சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத்திற்கு எதிராக பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பினை வழங்கியுள்ளது.
தீவிரவாதிகளுக்கு பென்ஷன் கொடுத்து அவர்களை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ளும் நாடாக இன்று வரை பாகிஸ்தான் திகழ்ந்து வருகிறது. இப்படிப்பட்ட, ஒரு நாட்டை வேறு எங்கும் காண முடியாது என்பதே நிதர்சனம். அந்த வகையில், மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்டவன் லஷ்கர்-இ-தொய்பா தலைவன் ஹபீஸ் சயீத். பாகிஸ்தானில் பதுங்கியுள்ள தீவிரவாதியை (சயீத்) எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மோடி அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. எங்கள் நாட்டில் அவன் இல்லை என்று இம்ரான்கான் அரசு மறுத்து வந்தது. இந்தநிலையில் தான், பாகிஸ்தான் தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றம் 31 ஆண்டுகள் சிறை தண்டனையை அவனுக்கு விதித்துள்ளது. இதுதவிர, அபராதம் மற்றும் அவனின் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.