கேரளாவில், 2021-ல் பாஜக மாநிலக் குழு உறுப்பினர் ரஞ்சித் ஸ்ரீனிவாஸ் என்பவர் கொலைசெய்யப்பட்ட வழக்கில், SDPI மற்றும் தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 15 பேருக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக, 2021-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி ரஞ்சித் ஸ்ரீனிவாஸ், தனது வீட்டில் மனைவி, தாய் உட்பட குடும்பத்தினர் முன்னிலையில் கும்பல் ஒன்றால் வெட்டிக் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார்.
நீண்ட நாள்களாக விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், 12 பேர் நேரடியாக இந்த செயலில் நேரடியாக ஈடுபட்டதாகவும், மூன்று பேர் அவர்களுக்கு உதவியதாகவும் ஜனவரி 20-ம் தேதி நீதிமன்றத்தில் உறுதிசெய்யப்பட்டது. இந்த நிலையில், மாவேலிக்கரா கூடுதல் அமர்வு நீதிமன்றம், `நைசாம், அஜ்மல், அனூப், முகமது அஸ்லம், சலாம் பொன்னாட், அப்துல் கலாம், சஃபாருதீன், முன்ஷாத், ஜசீப் ராஜா, நவாஸ், ஷெமீர், நசீர், ஜாகீர் உசேன், ஷாஜி பூவத்துங்கல், ஷம்னாஸ் அஷ்ரப்’ ஆகியோருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருக்கிறது.
இந்நிலையில் சமூக வலைத்தளமான X ல் #மதவெறிக்கு_முற்றுப்புள்ளி என்ற ஹாஷ்டாக் டிரெண்டாகி வருகிறது.