விஜயபாரதம் பிரசுரத்தின் eBooks-PUSTHAKAM உறுப்பினர் திட்ட அறிமுகம் மற்றும் புதிய நூல் (ஆலயம் காணும் அயோத்தி நாயகன்) வெளியீடு.
பாரதம் மற்றும் உலகெங்கிலும் வாழும் தமிழ் வாசகர்கள், நமது விஜயபாரதம் பிரசுரத்தின் நூல்களைப் பெற்று, படித்து மகிழ்வதற்கு ஏதுவாக, நமது பிரசுரம் eBooks-புஸ்தகம் (மின்புத்தகம்) உறுப்பினர் திட்டத்தை அறிமுகம் செய்கிறது.
வரும் ஜனவரி 11(வியாழன்), ஹனுமன் ஜெயந்தி அன்று காலை 11 மணி முதல் உறுப்பினர் திட்ட இணையதளம் (vbooks.in) செயல்பாட்டிற்கு வரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
eBooks-புஸ்தகம் உறுப்பினர் திட்டத்தில் 1 ஆண்டிற்கான உறுப்பினர் கட்டணம்:
பாரதம் (Bharat): ₹1500
வெளிநாடு (Overseas): US $ 35
மேலும் ஜன.11(வியாழன்), ஹனுமன் ஜெயந்தி அன்று மாலை, நமது புதிய நூலான “ஆலயம் காணும் அயோத்தி நாயகன்”, நூல் வெளியீடு, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் நடைபெறும் புத்தகக் காட்சியில், நமது விஜயபாரதம் பிரசுரம் புத்தக அரங்கம் எண் F 64 ல் நடைபெறும் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசக அன்பர்கள் அனைவரும் நமது eBooks-புஸ்தகம் உறுப்பினர் திட்டத்திற்கு ஆதரவு நல்கிட வேண்டுகிறோம்.
ஜன.11 (வியாழன்) ஹனுமத் ஜயந்தி அன்று நடைபெறும் புத்தக வெளியீட்டிற்கும் வந்திருந்து நூலினை வாங்கிச் செல்ல வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்!!
அனைவரும் வருக! வருக!! நல் ஆதரவு தருக !!

ஹனுமன் ஜெயந்தி அன்று “ஆலயம் காணும் அயோத்தி நாயகன்” நூல் வெளியீடு !
Share it if you like it
Share it if you like it