பகவான் கிருஷ்ணரின் பிறந்தநாளை குறிக்கும் ஜென்மாஷ்டமி திருநாளை இந்தியா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இந்துக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் இன்று கொண்டாடி வருகின்றனர். விஷ்ணுவின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணர் பூமியில் அநீதி மற்றும் தீமைகளை முடிவுக்கு கொண்டுவர பிறந்ததை இந்த நாள் குறிக்கிறது. இந்த கொண்டாட்டத்தில் கிருஷ்ண பக்தர்கள் ஒன்று கூடி விரதம் கடைபிடித்து பஜனைகள் பாடி, பூஜைகள் செய்து கிருஷ்ணரை வழிப்பட்டு வருகின்றனர். பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் போட்டும் குழந்தையின் காலில் வண்ணங்கள் தடவி குழந்தையை வீட்டில் நடக்க வைப்பார்கள். அந்த கால் தடத்தை பார்க்கும்போது கிருஷ்ணரே தம் வீட்டிற்கே வந்தது போல் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
தர்மம் வீழ்ந்து அதர்மம் ஓங்கும்போது நான் அவதரிப்பேன் என்று கூறிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த திருநாளில் அனைவருக்கும் கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள் !