செட் அப் செல்லப்பாவா ராகுல்?: பாதயாத்திரையில் பங்கேற்ற பூணூல் சிறுவனால் கிளம்பிய விமர்சனம்!

செட் அப் செல்லப்பாவா ராகுல்?: பாதயாத்திரையில் பங்கேற்ற பூணூல் சிறுவனால் கிளம்பிய விமர்சனம்!

Share it if you like it

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் சிறுவனுக்கு பூணூல் அணிவித்து அழைத்து வந்த விவகாரம் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. சிறுவனை மேலாடை இல்லாமல் யாத்திரையில் அழைத்துச் சென்றது தவறு என்றும், பூணூல் அணிந்த விதம் தவறு என்றும், எல்லாம் செட் அப் என்றும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மூத்த தலைவருமான ராகுல் பாரத் ஜோடோ யாத்திரை என்கிற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரை ஒன்றை நடத்தி வருகிறார். இதற்காக, இரு ஊர்களுக்கும் இடையிலான 3,570 கி.மீட்டர் தொலைவை 150 நாட்கள் பாதயாத்திரையாக நடந்து சென்று வருகிறார். இந்த யாத்திரையை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். இந்த யாத்திரை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உட்பட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களை சுற்றி வந்து ஜனவரி 26-ம் தேதி ஜம்மு காஷ்மீரில் நிறைவடைகிறது.

இந்த யாத்திரையில் பிரபல நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் உட்பட பல தரப்பட்ட மக்களும் ஆங்காங்கே கலந்து கொள்கிறார்கள். அந்த வகையில், அவ்வப்போது சிறுவர், சிறுமிகளும் யாத்திரையில் சிறிது தூரம் ராகுல் காந்தியுடன் நடந்து செல்கிறார்கள். ஆனால், இது முழுக்க முழுக்க செட்டப் என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அதாவது, ராகுலின் யாத்திரை தற்போது ஹரியானா மாநிலத்தில் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது பனி காலம் என்பதால் யாத்திரையில் கலந்துகொள்பவர் அனைவரும், கோட் சூட், ஜெர்கின் உள்ளிட்ட குளிரை தாங்கக் கூடிய ஆடைகளையே அணிந்து பங்கேற்கின்றனர்.

இந்த நிலையில், சிறுவன் ஒருவன் வெற்று உடம்புடன் யாத்திரையில் பங்கேற்றிருக்கிறான். அந்த சிறுவன் உண்மையில் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவரா என்பது தெரியவில்லை. ஆனால், பிராமண சிறுவன் போல பூணூல் அணிந்து ராகுலுடன் யாத்திரையில் பங்கேற்றிருக்கிறான். இதுதான் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. முதலாவதாக, கடும் குளிரில் அனைவரும் ஜெர்கின் உள்ளிட்ட ஆடைகளை அணிந்திருக்கும் நிலையில், அவ்வளவு ஏன், ராகுல் காந்தியே தனது டீசர்ட்டுக்குள் குளிரை தாங்கக்கூடிய ஆடை அணிந்திருப்பதாக கூறப்படுகிறது. அப்படி இருக்க, அந்த சிறுவனை மட்டும் பேண்ட் தவிர வெற்று உடம்போடு யாத்திரையில் அழைத்துச் சென்றது ஏன் என்று கேள்வியோடு விமர்சனங்கள் அனல் பறக்கின்றன.

இரண்டாவதாக, வழக்கமாக பிராமணர்கள் பூணூல் அணியும்போது இடதுபுறமிருந்து வலதுபுறமாக அணிவதுதான் வழக்கம் என்கிறார்கள். தவிர, இதுதான் நடைமுறையும் கூட என்கிறார்கள். ஆனால், அந்த சிறுவனுக்கு வலதுபுறமிருந்து இடதுபுறமாக பூணூலை அணிவித்திருக்கிறார்கள். இதுவும் பிராமணர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை கிளப்பி இருக்கிறது. அதாவது, தந்தைக்கோ தாய்க்கோ மகன் இறுதிச்சடங்கு செய்யும்போதும் அல்லது தர்ப்பணம் கொடுக்கும்போதும் மட்டுமே வலதுபுறமிருந்து பூணூல் அணிய வேண்டும் என்கிறார்கள். எனவே, இது ஒரு செட்டப்பாக இருக்கலாம் என்கிற விமர்சனத்தை முன்வைக்கிறார்கள். ஆகவே, நாடகமாக இருந்தாலும் செய்வன திருந்தச்செய் என்று கிண்டல் செய்கிறார்கள்.

இதுகுறித்து அரசியல் ஆய்வாளரும், விமர்சகருமான ஸ்ரீராம் தனது ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் பதிவில், “ராகுல் முதலில் தனது மக்கள் தொடர்பாளர்களை மாற்ற வேண்டும் என்று மீண்டும் மீண்டும் உணர்கிறேன். ஒரு தந்தைக்கோ தாய்க்கோ மகன் தகனம் அல்லது தர்ப்பணம் போன்றவை செய்யும்போது மட்டுமே யக்யோபவிதம் (பூணூல்) வலது தோளில் அணிய வேண்டும். இதிலிருந்தே இது ஒரு நாடகம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனாலும், அதைச் சரியாகச் செய்யுங்கள் என்கிறோம். அல்லது இது “ஜானுதாரி பிராமணர்” வேண்டுமென்றே செய்ததா?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.


Share it if you like it