இன்று இந்தியா உட்பட உலக நாடுகள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. மாபெரும் எதிரி நாடுகளான ரஷ்யா மற்றும் அமெரிக்கா கூட தங்களின் பகையை மறந்து இந்த சூழலில் பரஸ்பரம் உதவி செய்துகொள்கின்றன. ஆனால் திடல் பட்டறையில் ஊறி வளர்ந்த ஓநாய் ஊடகவியலாளர்கள் இந்த நிலையிலும் கூட மலிவு அரசியல் செய்து வருகின்றனர்.
இந்தியாவில் நாளொன்றுக்கு 7,127 மெட்ரிக் டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் இருப்பதாகக் மத்திய அரசு கூறியுள்ளது. ஏப்ரல் 18ம் தேதி முதல் ஆக்ஸிஜன் தேவை முன்பில்லாதவகையில் 4,300 மெட்ரிக் டன்களாக அதிகரித்தது இதனால் நாட்டில் சில இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை சரி செய்ய ஒரு புறம் அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்ட, மறுபுறம் முன்கள பணியாளர்கள் போராடிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் ஒரு சிலர் கணினியை கட்டிப் பிடித்தபடி ஏசி அறையில் அமர்ந்து கொண்டு, பொய் செய்தி பரப்பி மக்களை குழப்பி வருகின்றனர்.
நமது நாடு வெளிநாடுகளுக்கு 9,294 மெட்ரிக் டன்கள் ஆக்சிஜன் ஏற்றுமதியை 2021 முதல் காலாண்டில் செய்துள்ளது. அதில் வங்கதேசத்துக்கு மட்டும் 8,828 மெட்ரிக் டன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. நமது நாட்டில் ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் தவித்து கொண்டு இருக்கும் சூழலில் மோடி அரசு வெளி நாட்டிற்கு பெரிய அளவில் ஏற்றுமதி செய்திருப்பது மாபெரும் முட்டாள் தனம், அதனால் தான் இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது என பெரும்பாலான ஊடகங்கள் எழுதிவிட்டன.
உடனடியாக விழித்துக் கொண்ட மத்திய அரசு, ஆக்சிஜனில் இரண்டு வகை ஒன்று நிறுவனப் பயன்பாடு, மற்றொன்று மருத்துவப் பயன்பாடு. இதில் நாம் ஏற்றுமதி செய்தது நிறுவனப் பயன்பாட்டு ஆக்சிஜன் அதாவது வெல்டிங் செய்யப் பயன்படுத்தும் ஆக்சிஜன் அவ்வளவே… என அரசு விளக்கமளித்தது.
மேலும் நமக்கு கிடைத்த தகவலின் படி மருத்துவ ஆக்சிஜன் ஏற்றுமதி வெறும் 12 மெட்ரிக் டன் தான் நடந்துள்ளது. அதாவது மொத்த உள்நாட்டு ஆக்சிஜன் உற்பத்தியில் 0.4% தான் இந்த உண்மையை மக்களிடம் கொண்டு சேர்க்காமல் நியூஸ் 18 உள்ளிட்ட ஊடகங்கள் பொய் செய்தியை பரவவிட்டுக் கொண்டு இருக்கின்றன.
விக்னேஷ் வாசுதேவ்.R