முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து அவர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு சிறப்பு மலர் வெளியிட்டார்.
முன்னதாக, எக்ஸ் சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவில், அண்ணாதுரை மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் வணங்குவது போல் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
‛‛வாழும் காலத்தில் ஒளி தரும் உதயசூரியனாய் வாழ்ந்து, மறைந்த பிறகும் கலங்கரை விளக்கமாய் வழிகாட்டிக் கொண்டிருப்பவர் தான் தலைவர் கருணாநிதி. நீங்கள் பாதை அமைத்தீர்கள் நாங்கள் பயணத்தை தொடர்கிறோம்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சமூக வலைத்தளமான எக்ஸ் – ல் #HBDFatherOfCorruption என்கிற ஹாஸ்டேக் டிரெண்டாகி வருகிறது.
மு.கருணாநிதி இந்திய அரசியல்வாதிகளுள் ஒருவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் 1969 முதல் 2018 வரை பதவி வகித்துள்ளார். 1969,1971,1989,1996,2006 என ஐந்து முறை தமிழக முதலமைச்சராகப் பணியாற்றினார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். ‘தூக்குமேடை’ நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு, ‘கலைஞர்’ என்ற பட்டம் அளித்தார். இவர் இந்திய அரசியலில் தொடர்ந்து பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். இவர் 2018 ஆகத்து 7-ஆம் நாள் தம்முடைய 94-ஆம் அகவையில் சென்னையில் காலமானார்.