காஷ்மீரில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி கோவில் மிகவும் பிரபலமானது. அக்கோவிலில் ஒரே நாளில் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக வைஷ்ணவ தேவி கோவில் வாரியம் தனது ஹெலிகாப்டர் சேவையை தொடங்கி உள்ளது.
ஜூன் 18 ஆம் தேதி முதல் ஜம்முவில் இருந்து வைஷ்ணவி தேவி கோயிலுக்கு நேரடி ஹெலிகாப்டர் சேவைகள் வழங்கப்படும் என்று ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி ஆலய வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அன்ஷுல் கர்க் தெரிவித்துள்ளார்.
“ஜூன் 18 முதல் ஜம்மு மற்றும் வைஷ்ணவி தேவி கோவில் பவன் இடையே நேரடி ஹெலிகாப்டர் சேவையை நாங்கள் தொடங்குகிறோம். இந்த தொகுப்பின் ஒரு பகுதியாக பேட்டரி கார் சேவை, முன்னுரிமை தரிசனம், பிரசாத் சேவா மற்றும் பைரோன் கோவிலுக்கு கயிறு பாதை (ropeway) போன்ற பிற வசதிகள் கிடைக்கும். எங்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்யுங்கள், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பக்தர்கள் இந்த வசதியைப் பெறலாம். இவ்வாறு அன்ஷுல் கர்க் தெரிவித்துள்ளார்.