‘லவ் ஜிகாத்’தால் பாதிக்கப்படும் பெண்களை பாதுகாக்க ‘ஹெல்ப்லைன்’ எண் !

‘லவ் ஜிகாத்’தால் பாதிக்கப்படும் பெண்களை பாதுகாக்க ‘ஹெல்ப்லைன்’ எண் !

Share it if you like it

‘லவ் ஜிகாத்’தால் பாதிக்கப்படும் பெண்களை பாதுகாக்க, ஸ்ரீராமசேனை அமைப்பு, ‘ஹெல்ப்லைன்’ எண்ணை துவங்கியுள்ளது.

காதல் என்ற பெயரில் ஹிந்து பெண்களை ஏமாற்றி, திருமணம் செய்து, கட்டாய மத மாற்றம் செய்வதாக ஸ்ரீராமசேனை அமைப்பு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில் ‘லவ் ஜிகாத்’தால் பாதிக்கப்படும் பெண்களை பாதுகாக்க, ஸ்ரீராமசேனை அமைப்பு 90904 43444 என்ற, ஹெல்ப்லைன் எண்ணை நேற்று அறிமுகப்படுத்தியது. ஹூப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் ஹெல்ப்லைன் எண்ணை, ஸ்ரீராமசேனை அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் அறிமுகம் செய்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி:

‘லவ் ஜிகாத்’தில் பாதிக்கப்படும் பெண்கள், ஹெல்ப்லைன்னுக்கு எந்த நேரத்திலும் போன் செய்யலாம். அவர்கள் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணப்படும். ‘லவ் ஜிகாத்’தால் பாதிக்கப்படும் ஹிந்து பெண்கள், எக்காரணம் கொண்டும் உயிரை விட கூடாது. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.

ஹிந்து இளம்பெண்கள், பெண்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கவும், ஸ்ரீராம சேனை தயாராகி வருகிறது. ஹிந்து இளம்பெண்கள் கொலை நடக்கும்போது, அரசியல்வாதிகள் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு கூறுவதை கைவிட வேண்டும்.

சட்டத்தை கடுமையாக்க வேண்டும். சட்டத்தில் உள்ள ஓட்டைகளை சரி செய்ய வேண்டும். நேஹா, அஞ்சலி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், ஆதாரம் இல்லை என்று விடுவிக்கப்பட்டால், அவர்களை நாங்கள் தண்டிப்போம். ஹிந்து பெண்களை பாதுகாக்க அரசும், போலீஸ் துறையும் தவறிவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *