கடந்த ஆண்டு சென்னை அருகே கெருகம்பாக்கம் பகுதியில் சென்ற மாநகர அரசுப் பேருந்தில் படியில் தொங்கியபடி மாணவர்கள் சிலர் பயணித்தனர். அப்போது அந்த வழியாக தனது வாகனத்தில் வந்த பாஜக நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் பேருந்தை ஓவர்டேக் செய்து வழிமறித்து நிறுத்தி மாணவர்களை சரமாரியாகத் திட்டியுள்ளார். படியில் தொங்கியபடி பயணம் செய்ததைக் கண்டித்த அவர், மாணவர்களை இறக்கிவிட்டதோடு மட்டுமல்லாது அவர்கள் மேல் கொண்ட அக்கரையில் அந்த மாணவர்களை அடித்தார். மேலும் பேருந்து ஓட்டுநர், நடத்துநரையும் சண்டை நீங்கள் இதை எல்லாம் கேட்கமாட்டீர்களா என்று சண்டை போட்டார். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதற்கு ஒரு தரப்பில் எதிர்ப்பு இருந்தாலும் பலரும் இந்த செயலை பாராட்டினர். இருந்தாலும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் காவல் துறையில் புகார் அளித்து ரஞ்சனா நாச்சியாரை கைது செய்தனர். பிறகு ஜாமினில் வெளி வந்தார். இந்த சம்பவத்தை அடுத்து ஒரு மாணவன் பேருந்தில் படிக்கட்டில் தொங்கி கொண்டு சென்றதால் கீழே விழுந்தார். இதுபோல் ரஞ்சனா நாச்சியார் அன்று அந்த மாணவர்களை தட்டி கேட்காமல் இருந்திருந்தால் அன்றைக்கும் இதேபோல் சம்பவம் நிகழ்ந்திருக்கும்.
இந்நிலையில் அனைத்து பேருந்துகளிலும் படிக்கட்டு பயணத்தை தவிர்க்கும் வகையில் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டுமென தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் தானியங்கி கதவுகள் இல்லாத பேருந்துகளின் எண்ணிக்கையை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.