ஹிஜாப் போராட்டம்: பிளஸ் 2 மறுதேர்வு கிடையாது!

ஹிஜாப் போராட்டம்: பிளஸ் 2 மறுதேர்வு கிடையாது!

Share it if you like it

ஹிஜாப் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய அடிப்படைவாத மாணவிகளுக்கு பிளஸ் 2 மறு தேர்வு கிடையாது என்று கர்நாடக மாநில அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் இஸ்லாமிய அடிப்படைவாத மாணவிகள் சிலர், திடீரென கடந்த ஜனவரி மாதத்தில் ஹிஜாப், புர்கா, பர்தா ஆகியவற்றை அணிந்து வரத் தொடங்கினர். இதற்கு கல்வி நிறுவனங்கள் எதிர்ப்புத் தெரிவிக்க, அடிப்படைவாத மாணவிகளோ தர்ணாவில் ஈடுபட்டனர். இதற்கு போட்டியாக ஹிந்து மாணவிகள் காவித்துண்டு அணிந்து வருவோம் என போர்க்கொடி தூக்கினர். இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பரவவே, ஹிஜாப், காவி ஆகிய ஆடைகளுக்கு தடை விதித்த மாநில அரசு, பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்தது. இதை எதிர்த்து அடிப்படைவாத அமைப்பினர் அம்மாநில ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பள்ளி, கல்லூரிகளை திறக்க உத்தரவிட்டதோடு, இவ்வழக்கின் தீர்ப்பு வரும்வரை ஹிஜாப், காவி என மத அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையிலான ஆடைகளை யாரும் அணியக்கூடாது என்று தடை விதித்தனர். இதைத் தொடர்ந்து, பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன. அப்போதும், அடிப்படைவாத மாணவிகள் ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்தே வந்தனர். அந்த சமயத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பிராக்டிக்கல் (செய்முறை) தேர்வு நடந்து வந்தது. எனவே, அடிப்படைவாத மாணவிகளிடம் சமாதானம் பேசிய கல்வி நிறுவனங்கள், ஹிஜாப்பை அகற்றி விட்டு வந்து தேர்வெழுதுமாறு கேட்டுக் கொண்டனர். இவர்களில் சிலர் ஹிஜாப், பர்தா, புர்கா ஆகியவற்றை அகற்றிவிட்டு, சீருடையுடன் வந்து தேர்வை எழுதினர்.

ஆனால், ஒரு சில அடிப்படைவாத மாணவிகளோ, எங்களுக்கு தேர்வைவிட ஹிஜாப்தான் முக்கியம் என்று கூறி தேர்வெழுத்த மறுத்து தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த சூழலில், பிளஸ் 2 மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு விரைவில் நடைபெறவிருக்கிறது. எனவே, தங்களுக்கு செய்முறை தேர்வு எழுத மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் அடிப்படைவாத மாணவிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில்தான், ஹிஜாப் விவகாரத்துக்காக தேர்வை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட மாட்டாது என்று கர்நாடக மாநில அரசு அறிவித்திருக்கிறது. இதனால் என்ன செய்வதெனத் தெரியாமல் கையைப் பிசைந்து நிற்கிறார்கள் மாணவிகள். சில அடிப்படைவாதிகளின் தூண்டுதலைக் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு, தற்போது தங்களது வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கிறார்கள் மாணவிகள். பரிதாபம்தான்!


Share it if you like it