நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல்: கர்நாடகா ஜெயிலில்தான் களியாம்!

நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல்: கர்நாடகா ஜெயிலில்தான் களியாம்!

Share it if you like it

ஹிஜாப் விவகாரத்தில் தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளை கர்நாடக மாநில போலீஸார் தேடி வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் பயின்று வந்த இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த மாணவிகள் சிலர், கடந்த ஜனவரி மாதம் திடீரென ஹிஜாப், பர்தா, புர்கா ஆகியவற்றை அணிந்து வரத் தொடங்கினர். இதற்கு கல்வி நிறுவனங்கள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அடிப்படைவாத மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த ஹி்ந்து மாணவ, மாணவிகள், அவர்கள் ஹிஜாப் அணிந்து வந்தால், நாங்கள் காவி ஷால் மற்றும் துண்டு அணிந்து வருவோம் என்று போர்க்கொடி தூக்கினர். இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பரவி, இரு தரப்பினரிடையே மோதலை ஏற்படுத்தும் சூழல் உருவானது.

இதையடுத்து, மத அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையிலான எந்த ஆடையையும் யாரும் அணியக்கூடாது என்று தடைவிதித்தது மாநில அரசு. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாடியது அடப்படைவாத மாணவிகள் தரப்பு. இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டும், மாநில அரசு விதித்த தடை செல்லும். காரணம், ஹிஜாப் இஸ்லாமிய சட்டப்படி அத்தியாவசியமான உடை என்று குறிப்பிடவில்லை. தவிர, கல்வி நிறுவனங்களுக்கு சீருடை அணியச் சொல்லும் உரிமை உண்டு என்று தீர்ப்பளித்தனர்.

எனினும், கோர்ட்டின் இத்தீர்ப்பை எதிர்ப்பு அம்மாநிலத்தில்கூட யாரும் போராடவில்லை. ஆனால், தமிழ்நாட்டிலுள்ள இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத், இத்தீர்ப்பை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதற்கு தமிழக அரசும் அனுமதி வழங்கி இருந்தது. அதன்படி, மார்ச் 17-ம் தேதி தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தவ்ஹீத் ஜமா அத் அமைப்பைச் சேர்ந்த அடிப்படைவாதிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவ்வமைப்பின் நிர்வாகிகள் பலரும், ஹிஜாப்புக்கு தடை விதித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு பகிரங்கமாக மேடையிலேயே கொலை மிரட்டல் விடுத்தனர்.

இவ்வாறு கொலை மிரட்டல் விடுத்த தவ்ஹீத் ஜமா அத் நிர்வாகிகள் மீது இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த வேலூர் இப்ராகிம் உட்பட பல்வேறு தரப்பினரும், வி.ஹெச்.பி., இந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளும் போலீஸில் புகார் கொடுத்தன. ஆனால், தமிழக அரசோ நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வந்தது. இந்த சூழலில், தமிழகத்தில் தவ்ஹீத் ஜமா அத் நிர்வாகிகள், கர்நாடக நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த வீடியோ, அம்மாநில மாநில உயர் நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரியும் உமாபதி என்பவருக்கு வாட்ஸ் ஆப் மூலம் சென்றிருக்கிறது. இதனை அவர் உயர் நீதிமன்ற பதிவாளரின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்.

பின்னர், இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் நிர்வாகிகள் மீது, அம்மாநில போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, ஹிஜாப் விவகாரத்தில் தீர்ப்பளித்த கர்நாடக மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிதுராஜ் அஸ்வதி உட்பட 3 பேருக்கும் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டிருக்கிறார். இதனிடையே, கண்துடைப்புக்காக தமிழக அரசும் தவ்ஹீத் ஜமா அத் நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், கர்நாடகாவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் நிர்வாகிகள், அம்மாநில கோர்ட்டிலும் ஆஜர்படுத்தப்பட வேண்டும். அப்போது, அவர்கள் அம்மாநில சிறையில் களிதிங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

மதுரையில் நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த ரஹமத்துல்லா…


Share it if you like it