தி.மு.க.வின் கபட நாடகம்: 27-ல் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்!

தி.மு.க.வின் கபட நாடகம்: 27-ல் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்!

Share it if you like it

ஹிந்தி விவகாரத்தில் தி.மு.க.வின் கபட நாடகத்தை கண்டித்தை பா.ஜ.க. சார்பில் 27-ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்திய கல்வி நிறுவனங்களில் மாநில மொழிதான் பயிற்று மொழியாக இருக்க வேண்டும். ஹிந்தி பேசும் மாநிலங்ளில் ஹிந்து மொழி கட்டாய பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. அதன்படி, தமிழகத்தில் தமிழ்தான் பயிற்று மொழியாக இருக்கும். ஆனால், தமிழகத்தில் ஹிந்தியை திணிப்பதாகக் கூறி, தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. மேலும், தி.மு.க. இளைஞர் அணி சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

இதற்கு தமிழக பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து பேசிய பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஹிந்தியை எதிர்க்கும் உதயநிதி ஸ்டாலின், ஹிந்தி படங்களை வாங்கி தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்வது ஏன்? என்று காட்டமாக கேள்வி எழுப்பியதோடு, தி.மு.க.வினர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு கோபம் வரும்போதெல்லாம், ஹிந்தி திணிப்பு என்ற ஆயுதத்தை எடுத்துக் கொள்ளும். மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே தி.மு.க. ஹிந்தி திணிப்பை கையில் எடுத்திருக்கிறது என்றும் குற்றம்சாட்டினார். மேலும், தி.மு.க.வை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அண்ணாமலை இன்று வெளியிட்டிருக்கும் தனது ட்விட்டர் பதிவில், “தாய்மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிக்கும் திறனற்ற தி.மு.க. அரசைக் கண்டித்து, தமிழக பா.ஜ.க. சார்பில் அக்டோபர் 27-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தி.மு.க.வின் கபட நாடகங்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவோம்! சேவ் அவர் தமிழ் என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Share it if you like it