தமிழக அரசு சார்பில் ஹிந்தியில் வெளியான கடிதம் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் சமயத்தில் மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் இன்றுவரை திணறி வருகிறது தி.மு.க. இதுதவிர, மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை மேற்கொண்டு வருகிறது. மோடி அரசுடன் இணக்கமாக இருந்து மற்ற மாநிலங்கள் வேகமான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. ஆனால், தமிழகத்தின் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை அறிவார்ந்த தமிழக மக்ககள் நன்கு அறிவர். ஒரு குடும்பமே ஆட்சி நடத்தி வருவதால் மாநிலத்தின் வளர்ச்சி பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
ஆளும் தி.மு.க. அரசு தனது தொடர் தோல்விகள் மூலமாக தமிழக மக்களிடம் கடும் அதிருப்தியை பெற்றுள்ளது. மக்களின் கோவத்தை திசை திருப்பும் வகையில், இதற்கு முழு காரணம் மத்திய அரசும் தமிழக ஆளுநரும் தான் காரணம் என பொய்யான தகவலை பரப்பி வருகின்றன. மேலும், தமிழர்களிடம் தொடர்ந்து மொழி உணர்வை தூண்டி வருகிறது. இதுதவிர, ஹிந்தி மொழிக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை கடைபிடித்து வருகிறது. மேலும், எதிர்க்கட்சியாக இருந்த பொழுது ’ஹிந்தி தெரியாது போடா’ எனும் வாசகம் கொண்ட டி. சர்ட்டை உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல தி.மு.க.வினர் அணிந்து கொண்டு தங்களது கடும் எதிர்ப்பினை பதிவு செய்து இருந்தனர். இதற்கு, அடிமை ஊடகங்கள் மற்றும் உ.பி.ஸ்கள் சிறப்பான முட்டு கொடுத்து இருந்தனர். இப்படியாக, தி.மு.க அரசு ஹிந்தி மொழிக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில், சட்டசபையில் 110 விதியின் கீழ் ‘அம்பேத்கர் பிறந்த நாள் சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும்’ என முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்தார். இது தொடர்பான விவரம் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, ஹிந்தி மொழியில் இந்த கடிதம் வெளியிடப்பட்டு இருப்பது தமிழக மக்கள் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தி மொழிக்கு எதிராக பேசிவிட்டு தற்பொழுது ஹிந்தி மொழியில் கடிதம் எழுதி இருப்பது ஏன்? என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.