திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திலுள்ள மூர்த்திகள் மற்றும் சிற்பங்கள் அனைத்தும் மிகுந்த கலை நுணுக்கம் கொண்டவையாக அமைந்துள்ளது. ஆலய மேல் விதானத்தில் சூரிய-சந்திர-கிரகண சுதை சிற்பங்கள் காட்சியளிக்கின்றன.
இத்திருத்தலத்தில் கம்பத்தடியான் என்று அழைக்கப்படுகின்ற ஆஞ்சநேயர், கையில் சஞ்சீவி மலையுடன் தெற்கு திசை பார்த்து காட்சியளிக்கிறார். இவரை வேண்டி வழிபட, எமபயம் நீங்கும் என்றும் வேண்டிய வரங்கள் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்திருத்தலத்தில் லட்சுமி நரசிம்மர், லட்சுமி ஹயக்ரீவர் போன்றோரும் இருப்பதால் அவர்களை வழிபட பில்லி, சூனியம், ஏவல், கடன் தொல்லைகள், திருமணத் தடைகள் நீங்குமென்றும் குழந்தைபேறு வேண்டி வழிபடுவோருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்றும் நம்பப்படுகிறது.
இந்த ஊருக்கு வடக்கே சஞ்சீவி மலையின் ஒரு துண்டு விழுந்து உருவானதாக கூறப்படும் மூலிகைகள் நிறைந்து காணப்படும் தலைமலை அமைந்துள்ளது. வைகாசி விசாக நாளன்று நம்மாழ்வார் சாற்றுமுறை முடிந்து வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இத்தலத்திற்கு வந்து வழிபட்டால், நோயற்ற வாழ்வு, தொழில் முன்னேற்றம் ஏற்படும் என்பது பக்தர்களது நம்பிக்கை.
இத்தனை சிறப்புமிக்க கோவில் கேரளாவை சேர்ந்த இஸ்லாமிய கல்லூரி மாணவர்களால் தாக்கப்பட்டதாக இந்து முன்னணி குற்றச்சாட்டை வைத்துள்ளது. மேலும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் இந்துமுன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்து முன்னணி எக்ஸ் பதிவில்,
கேரளாவை சேர்ந்த இஸ்லாமிய கல்லூரி மாணவர்களால், திருச்சி புறநகர், தொட்டியத்தில் ஆஞ்சநேயர் கோவில் தாக்கப்பட்டது. இஸ்லாமிய குற்றவாளிகளை கைது செய்ய கோரியும், அந்தக் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும் தொட்டியம் காவல் நிலையத்தில் இந்து முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.