பள்ளிக்கு வருகை தந்த திமுக நிர்வாகிக்கு பள்ளி மாணவ மாணவிகளை வைத்து அவர்களின் கால்களுக்கு பூக்களை தூவ செய்த சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியம், பெரியமணலி அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 13 ஆம் தேதி அன்று மாணவர்களுக்கு அரசு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.
அந்த விழாவிற்கு திமுகவின் மாவட்ட செயலாளர், மதுரா செந்தில் வருகை புரிந்தார். அப்போது அவர்களுக்கு வரவேற்பு என்ற பெயரில், பள்ளி மாணவிகளை வைத்து மாணவியரை வைத்து அவர்களின் கால்களுக்கு பூக்களை தூவ செய்துள்ளனர் பள்ளி ஆசிரியர்கள்.
இதுதொடர்பான காணொளியை சம்பந்தப்பட்ட அந்த மாவட்ட செயலாளரே சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளாக கூறப்படுகிறது.
இந்த காணொளியை கண்ட மாணவ, மாணவியரும் அவர்களின் பெற்றோரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் மாணவச் செல்வங்களை இவ்வாறு இழிவுப்படுத்திய பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஆசிரியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அவர்களிடம் இந்து முன்னணி சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.