நேற்று டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 134-வது பிறந்த நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இன்று (ஏப்ரல் 14) அவரது திருவுருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நாடாளுமன்றத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “நமது அரசியலமைப்பின் சிற்பியும், நமது தேசத்தைக் கட்டமைத்த மகத்தான தலைவர்களுள் ஒருவருமான பாபாசாகேப் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் பிறந்த நாளில் நமது நாட்டுமக்களுக்கு நான் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறும்போது, “டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளில் அவருக்கு எனது பணிவான அஞ்சலிகள். பாரதத் தாயின் புதல்வரான அவர் இந்திய அரசியல் அமைப்பின் சிற்பி மட்டும் இல்லை, சமூக நீதிக்காகவும் பாடுபட்டவர். சட்டத்தின் ஆட்சி, சமூக உரிமைகள், பாலின சமத்துவம் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவைகளை மேம்படுத்து அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம், சமத்துவ இந்தியாவைக் கட்டி எழுப்பும் சமூக மாற்றத்துக்கு வித்திட்ட முன்னோடியாவர். டாக்டர் அம்பேத்கரின் லட்சியங்களை ஏற்றுக்கொண்டு சமூக நீதிக்கான அவரது பார்வைகளை நினைவாக்க பாடுபடுவோம்” என்று தெரிவித்தார்.
மேலும் நேற்று சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள, டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு, மாநில செய்தித்தொடர்பாளர் ஏ.டி. இளங்கோவன் அவர்கள் தலைமையில், இன்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர்….. பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்..
இதேபோல் தூத்துக்குடி தெற்கு மாவட்டம், காயல்பட்டினம் அருணாசலபுரத்தில் அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று, அவருடைய முழு உருவ சிலைக்கு, இந்துமுன்னணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது… மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்தி வேலன் கலந்து கொண்டு சிறப்பித்தார்…