பகவான் ராமர், சீதா பிராட்டி, லட்சுமணன், ஹனுமன் ஆகியோரை இழிவுபடுத்தி கவிதை என்கிற பெயரில் வன்மத்தை வெளிப்படுத்தி இருக்கும் நபரை தி.மு.க. அரசு இதுவரை கைது செய்யாததால், ஹிந்துக்களும், ஹிந்து அமைப்புகளும் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன.
தமிழகத்தில் நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு நபர் கவிதை வாசிக்கிறார். ஆனால், அந்தக் கவிதை முழுக்க முழுக்க வன்மத்துடன் ஹிந்து தெய்வங்களான ராமர், சீதா பிராட்டி, லட்சுமணன், ஹனுமன் ஆகியோரை இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது என்பதுதான் வேதனை.
அக்கவிதையில், “வீட்டு மலக்குழியில் ஒரு வாரமாய் அடைப்பு. அடைப்பெடுக்க எங்கெங்கோ சுற்றி அந்தணர் கிடைக்காமல், அயோத்தி சென்று ராமனை கையோடு கூட்டி வந்தேன். முதலில் மறுத்தவனிடம் பணம் கூடத் தருவதாகக் கூறினேன். ஒரு புட்டி சாராயத்தை ஒரே மூச்சில் குடித்து குழிக்குள் குதித்தான் ராமன். லட்சுமணனும், ஹனுமனும் துண்டு பீடியை ஆளுக்கு ஒரு இழுப்பு இழுத்த பின் வாலி, கொச்சைக் கயிறு, அகப்பை, மூங்கில் கழியோடு உள்ளே இறங்கினார்கள்.
கணவன், கொளுந்தன் வில், அம்புகளையும், ஹனுமனின் கதாயுதத்தையும் காவல் காத்துக் கொண்டிருந்த சீதா பிராட்டி, பசி என்றாள். உயர் ஜாதி ஏழைகளின் பசி கொடுமையானது. எனவே, கடைத் தெருவுக்கு சென்று திரும்பினேன். மலக்குழியை மூடிவிட்டு இலங்கையை நோக்கி சென்றிருந்தாள் போல சீதா பிராட்டி. அருகில் கிடந்த சிகரெட் அட்டையில் எழுதி இருந்தால், மன்றாடிக் கேட்கிறேன், மலக்குழியை திறக்க வேண்டாம் என்று. எனக்கும் மனமில்லை மலக்குழியை திறப்பதற்கு” என்று முடிகிறது.
அதாவது, அந்தணர்களை இழிவுபடுத்தும் நோக்கில் எழுதப்பட்டிருக்கும் இக்கவிதை என்கிற வன்மத்தில், கோடானகோடி ஹிந்துக்களின் தெய்வமாக வணங்கப்படும் பகவன் ராமரையும், சீதா பிராட்டியையும், லட்சுமணனையும், ஹனுமனையும் கேவலப்படுத்தி இருக்கிறார்கள். அதோடு, சீதா பிராட்டியை களங்கப்படுத்தும் வகையில், இலங்கைக்கு சென்றுவிட்டதாக கூறியிருப்பது வன்மத்தின் உச்சம். இப்படியொரு கவிதையை வாசித்த நபரை தி.மு.க. அரசு இதுவரை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
இதே முகமது நபி, ஆயிஷா பற்றியோ அல்லது இயேசு கிறிஸ்து பற்றியோ அல்லது ஸ்டாலின் மற்றும் அவரது தந்தை உள்ளிட்ட குடும்பத்தினரைப் பற்றியோ சமூக வலைத்தளங்களில் விமர்சனப் பதிவு வெளியாகி இருந்தால் தமிழக காவல்துறையின் கரங்கள் அழுத்தமாகப் பதிந்திருக்கும். ஆனால், ஹிந்து தெய்வங்களைப் பற்றிய கவிதை என்பதால் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டிருக்கிறது என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள். இதன் மூலம் தி.மு.க. இன்று மட்டுமல்ல என்றைக்கும் ஹிந்து விரோத அரசுதான் என்பது புலனாகிறது.