மதுக்கடைகள், சினிமா தியேட்டர், மெரினா, மற்றும் பள்ளிகள் என அனைத்திற்கும் அனுமதி வழங்கி விட்டு, ஹிந்து ஆலயங்களை வெள்ளி, சனி, ஞாயிறு அன்று மட்டும் திறக்க அனுமதி வழங்காமல் தொடர்ந்து தனது ஹிந்து விரோத போக்கை மேற்கொண்டு வருகிறது தி.மு.க அரசு என்பது மக்களின் கடும் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

இந்நிலையில் உலகப் புகழ் பெற்ற ஆலயமும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பார்த்தசாரதி கோவிலில் பணத்தை பெற்றுக் கொண்டு காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள், என மிக முக்கிய நபர்களுக்கு சாமி தரிசனம் செய்ய ஹிந்து அறநிலையத்துறையை சேர்ந்த ஊழியர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.

இதனை அறிந்த இந்து முன்னணி தொகுதி செயலாளர் விஜயகுமார் மோகன், மாநகர பொதுச் செயலாளர் மேகநாதன் மற்றும் இன்னும் பிற முக்கிய நிர்வாகிகள் ஹிந்து அறநிலையத்துறையின் அட்டூழியத்தை கண்டித்து பொதுமக்களுடன் இணைந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
