சனாதனத்தை அழிப்பேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாளவன் மேடை தோறும் பேசி வருகிறார். இதற்கு, இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கிறிஸ்தவ மிஷநரிகள் மற்றும் பிரிவினைவாதிகள் மறைமுகமாக தங்களது ஆதரவினை வழங்கி வருகின்றனர். இதுதவிர, திராவிடர் கழக தலைவர் வீரமணி, நீலகிரி எம்.பி. ஆ.ராசா உள்ளிட்டவர்கள் ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டு முறைகளை இன்று வரை கொச்சைப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தலைவர்கள் வழக்கத்தில் இல்லாத மனுஸ் மிருதி நூலை ஒரு லட்சம் காப்பி எடுத்து மக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். இவர்களது, நோக்கம் ஹிந்துக்களின் மத்தியில் பிரிவினையை உருவாக்க வேண்டும் என்பதை தவிர வேறு எந்த எண்ணமும் கிடையாது. தமிழக மக்களின் கவனத்தை தனது பக்கம் திசை திருப்பும் வகையில் திருமாவளவன் இந்த நாடகத்தை நடத்தி வருகிறார் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் தான், ஐப்பான் நாட்டை சேர்ந்தவர்கள் நாகை மாவட்டத்திற்கு வந்து சிக்கல் முருக பெருமானை மனமுருகி வழிப்பட்டுள்ளனர். அதன் லிங்க் இதோ.
திருமாவளவன் போன்று ஆயிரம் பேர் கிளம்பி வந்தாலும். சனாதனத்தை காப்பாற்ற நாங்கள் இருக்கிறோம் என்பது ஐப்பானியர்களின் வருகை அமைந்து இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
