1,071 ஆண்டுகள் பழமை மிக்க கோவிலை காணோம்: மாஜி அதிகாரி பகீர் புகார்!

1,071 ஆண்டுகள் பழமை மிக்க கோவிலை காணோம்: மாஜி அதிகாரி பகீர் புகார்!

Share it if you like it

காஞ்சி அருகே இருந்த பெருமாள் கோவிலை காணவில்லை என்று முன்னாள் காவல்துறை உயர் அதிகாரி புகார் தெரிவித்து இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக இருந்து ஓய்வு பெற்றவர் பொன்மாணிக்க வேல். இவர், சமீப காலமாக ஹிந்து கோவில்களுக்கு ஆதரவாகவும், ஹிந்து அறநிலையத்துறையில் நிகழும் அவலங்களை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார்.

இதனிடையே, திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் உலக சிவனடியார்களுக்கான அடையாள அட்டை வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில், கலந்து கொண்ட பொன்மாணிக்க வேல் இவ்வாறு கூறினார் ;

தமிழகத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை தேவையற்றது. பக்தர்கள் உண்டியல்களில் பணத்தை போடாதீர்கள். வாழ்வாதாரமின்றி வறுமையில் தவிக்கும் அர்ச்சகர்களின் தட்டில் பணத்தை போடுங்கள். ஆண்டவன் தான் அதிகாரிகளுக்கு பிச்சை போட வேண்டும். அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ ஆண்டவனுக்கு பிச்சை போட முடியாது. கோவில்களில் உள்ள கல்வெட்டுகளில் இருந்து அரசு அதிகாரிகளின் பெயர்களை உடனே நீக்க வேண்டும்.

சென்னை அருங்காட்சியகத்தில் 2,500-க்கும் மேற்பட்ட புராதானமான சுவாமி சிலைகள் உள்ளன. அச்சிலைகளை, ஆகம விதிபடி மீண்டும் அதே கோவில்களில் பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபட அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும். இதனை, செய்யுமாறு அரசாங்கத்திற்கு நாம் மனு கொடுக்க கூடாது. அது தெய்வத்தை இழிவுப்படுத்துவது போல அமைந்து விடும். அரசே முன்வந்து இதனை செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

இப்படிப்பட்ட சூழலில், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மாஜி அதிகாரி பொன்மாணிக்க வேல் இவ்வாறு கூறியிருக்கிறார் ; கோவிந்தவாடி திருமால்பூர் இடையே, 1,071 ஆண்டுகள் தொன்மையான, நின்று அருளின பெருமாள் கோவில் இருந்தது. இந்தக் கோவில், 40 ஆண்டுகளுக்கு முன், காணாமல் போய்விட்டது. திருட்டு நடந்து 30 -40 ஆண்டுகளுக்கு மேலாகியும், சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுக்காமலும், அரசுக்கு தெரியாமலும் மறைத்து வைத்திருந்தது. தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.


Share it if you like it