மதம் மாறினார்கள்.! மனம் மாறினார்களா.!?

மதம் மாறினார்கள்.! மனம் மாறினார்களா.!?

Share it if you like it

மதம் மாறினார்கள்.! மனம் மாறினார்களா.!?

“கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த குடி தமிழ் குடி” என்பது நமது ஆன்றோர் வாக்கு. ஆதி காலத்தில் இருந்தே, தமிழர்கள் அனைவரும் தங்களுக்குப் பிடித்த கடவுள்களை, தங்களது விருப்பம் போல, வழிபட்டு வந்தனர்.

காலப் போக்கினாலும், அன்னியர்களின் படை எடுப்பினாலும், பல்வேறு விதமான மதங்கள், நமது நாட்டில் ஏற்படுத்தப் பட்டது. ஒரு காலத்தில், அனைவரும் இந்துக்களாகவே இருந்தனர் என்றே, வரலாற்று ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். பின்னர், பல்வேறு காரணங்களினால், மற்ற மதத்திற்கு அவர்கள் மாறி விட்டனர் எனவும், வரலாற்று ஆய்வாளர்கள் எடுத்து உரைக்கின்றனர்.

இந்து மதத்தில் இருந்து, மற்ற மதத்திற்கு மாறுவோர் சொல்லும் பிரதான காரணம், “இந்து மதத்தில் பார்க்கப் படுவது போல, மற்ற மதத்தில் ஜாதி பேதம் பார்ப்பது இல்லை” என்பதே… அது எந்த அளவிற்கு தவறானது என்பது, நடக்கக் கூடிய நிகழ்வுகளை, நாம் பார்க்கும் போது, நமக்கு நன்கு புலப்படுகின்றது.

கிறிஸ்துவ மதத்தில் சில உள்ள பிரிவுகள் :

புரோட்டஸ்டன்ட் சபை, (Protestant), கத்தோலிக்க (Catholic) திருச்சபை, ஆர்தொடாக்ஸ் சபை (Orthodox). இதனுடன் மாவட்டம் வாரியாக பல மறை மாவட்டங்கள் உள்ளன.

மதுரை உயர்மறை மாவட்டம், திருச்சி மறை மாவட்டம், தூத்துக்குடி மறை மாவட்டம், வேலூர் மறை மாவட்டம், சென்னை – மயிலை உயர்மறை மாவட்டம் என பல மறை மாவட்டங்கள் உள்ளன.

லத்தீன் வழிபாட்டு முறை கத்தோலிக்க மறை மாவட்டங்கள் தவிர, கத்தோலிக்க மறை மாவட்டங்களான சீரோ – மலபார் தக்கலை மறைமாவட்டம், சீரோ – மலபார் ராமநாதபுரம் மறைமாவட்டம், சீரோ – மலங்கரை மார்த்தாண்டம் மறைமாவட்டங்களும் உள்ளன.

இந்திய திருச்சபையின் சார்பாக, கன்னியாகுமரி பேராயம், திருநெல்வேலி பேராயம், வேலூர் பேராயம், கோயம்புத்தூர் பேராயம், சென்னை பேராயம் என எட்டு பேராயங்களும் இயங்கி வருகின்றன.

மாணவர் தீக்சித் தாயாரின் வேதனை :

2022 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் இருபத்தி எட்டாம் தேதி, சென்னையில் ஓரு தனியார் பள்ளியில் படித்த மாணவர் தீக்சித், எதிர்பாராத விதமாக, தன்னுடைய பள்ளி வாகன விபத்தில், உயிர் இழந்தார்.

பதறித் துடித்த அவரது பெற்றோர் வெற்றிவேல் மற்றும் ஜெனிபர் தம்பதியினர், தங்களது மகனின் உடலை அடக்கம் செய்ய,  கிறிஸ்துவக் கல்லறையை நாடினார்கள்.

இறந்து போன தனது மகன் ஆசைப் பட்டது போல, அந்த பிள்ளையை புதைக்க,  பெற்றோர் இடம் கேட்ட போது, ரோமன் கத்தோலிக்க நிர்வாகம், இடம் தர மறுத்து விட்டது.

அதற்கு அவர்கள் கூறிய காரணம், பெற்றோர் மதுரை சி.எஸ்.ஐ. (C.S.I.) சேர்ந்தவர்கள் என்பதால், பிள்ளைக்கு இடம் வழங்க முடியாது.

அந்தத் தாய், கண் கலங்கி கண்ணீர் வடித்ததை கண்ட போது, நமக்கும் கண்களில் கண்ணீர் வந்து இருக்கும். இதைப் பார்த்தவர்கள் எவராயினும், பிள்ளையை இழந்து, பரிதவிக்கும் அந்தத் தாயின் கண்ணீருக்கு பதில் கூற இயலாது.

கிறிஸ்துவ மதத்தில் இருந்து வெளியே வர விரும்பும் மக்கள்? :

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த பல கிறிஸ்தவர்கள், மதம் மாற விருப்பம் தெரிவித்ததாக, செய்தி ஒன்று, 2022 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி வெளியானது.

பட்டியலின மக்கள் தொடர்ந்து வேதனைக்கு உள்ளாக்கப் படுவதாகவும், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளும் தட்டி பறிக்கப் படுவதாகவும் அவர்கள் புகார் அளித்தனர்.

பேராயரின் செயல்பாடு மிகவும் வேதனையைத் தருவதாகவும், சாதியைக் காரணம் காட்டி புறக்கணிக்கப் படுவதாகவும், விபத்தில் பலியான பட்டியலின மாணவர்களுக்கு, அவர்களுடைய சமுதாயத்தைக் காரணம் காட்டி, எந்தவித சலுகைகளும் வழங்கப் படவில்லை எனவும், ஜாதியை காரணம் காட்டி, அந்தப் பகுதியில் உள்ள தேவாலயத்தை, மூன்றாக பிரிக்க இருப்பதாகவும், அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

ஒற்றுமையாக இருக்கும் மக்களிடையே, ஜாதி பாகுபாடு பார்ப்பதைக் கண்டித்து, அந்த மக்கள், துன்பப் படுவதைக் கண்டித்து, கிறிஸ்தவ மதத்தில் இருந்து, ஐந்து லட்சம் பட்டியலின கிறிஸ்தவர்கள் வெளியேற இருப்பதாக கூறினர்.

சிவகங்கை மறைமாவட்டத்தில் நிகழ்ந்த அவலம் :

டி.என்.யு.ஈ.எஃப். (TNUEF – Tamil Nadu Untouchability Eradication Front) என்ற அமைப்பு, சிவகங்கை மறைமாவட்டத்தில் பட்டியலின மக்களுக்கு ஏற்பட்ட துன்பமான நிகழ்வுகளை அறிக்கையாக வெளியிட்டது. அவர்கள் சாதியின் பெயரால், மிகவும் துன்பப் படுத்தப் படுகிறார்கள் எனவும், மேல் நிலைக்கு வராமல் தடுக்கப் படுகிறார்கள் எனவும், குற்றம் சாட்டியது.

https://www.thehindu.com/news/cities/chennai/dalit-christians-still-trapped-in-caste/article23485606.ece

கடந்த கால வரலாறு :

1663 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 20 ஆம் தேதி,  கொச்சி மன்னருடன் டச்சுக்காரர்கள் செய்துக் கொண்ட  ஒப்பந்தத்தின் படி, ஜெஸூட்களும், இதர கத்தோலிக்க பாதிரிகளும் நாடு கடத்தப் பட வேண்டும் என உள்ளது. கொளத்திரி ராஜாவுடனான ஒப்பந்தத்திலும், போர்த்துகீசிய பாதிரிகள் நாடு கடத்தப் பட வேண்டும் என்ற ஷரத் உள்ளன. (A Sreedharan Menon, A Survey of Kerala History, Kottayam, 1970)

திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தின் ஒரு பகுதி வடக்கமூர். இந்தப் பகுதியில் உள்ள, ரோமன் கத்தோலிக்க பாதிரிகள் வெளியேற்றப் பட வேண்டும் என்பது, டச்சுக்காரர்களுக்கும், வடக்கமூர் மன்னர்களுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் ஷரத்துகள் ஒன்று.  இந்த ஒப்பந்தமானது, 1664 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி, டச்சு பிரதிநிதியான ஹூஸ்டார்ட் என்பவரால் கையெழுத்து இடப்பட்டது. (SK Vasantham, Kerala Charithra Nikandu)

நாடு பிடிக்கும் ஆசையில், ஆங்கிலேயர்கள், நமது நாட்டிற்கு வந்து இருந்து, நமது மக்களை எந்த அளவு துன்பப் படுத்தினார்கள் என்பதையும், சுதந்திரம் வேண்டி போராட்டம் செய்த நமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு, எந்த அளவிற்கு கடும் நெருக்கடிக் கொடுத்து, தண்டனை வழங்கினார்கள் என்பதும், நமக்கு தெரிந்து இருக்கும்.

தற்போதைய நிலை :

நமது நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், 1951 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, தமிழகத்தில் கிறிஸ்தவ மக்கள் தொகை – 14.3 லட்சமாக இருந்தது, முஸ்லிம் மக்கள் தொகை – 14.4 லட்சம். இதுவே, 2011 ஆம் ஆண்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கிறிஸ்துவ மக்கள் தொகை – 44.2 லட்சம், முஸ்லிம் மக்கள் தொகை  – 42.3 லட்சம்.

கேரளாவிற்கு அடுத்த படியாக, தமிழகத்தில் தான், கிறிஸ்தவ மக்கள் தொகை அதிகமாக உள்ளது.

தற்போது, தமிழகத்தில் கிறிஸ்தவ மக்கள் தொகை – 6.1 சதவீதம். இதுவே, 1951ஆம் ஆண்டு, 4.7 சதவீதமாக இருந்தது.

https://swarajyamag.com/politics/changing-tamil-nadu-christians-ahead-of-muslims-in-absolute-numbers

அரசாங்க பதிவேட்டின் படி, கிறிஸ்தவர்கள் வெறும் 3.5 சதவீதம் என்றாலும், உண்மையிலேயே கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையோ 35 சதவீதம் என, கிறிஸ்தவர் ஒருவர் பேசியது, சமூக வலைதளங்களில் பரபரப்பை உண்டாக்கியது.

“கிரிப்டோ கிறிஸ்தவர்” (Crypto Christians) என்பவர்கள், அரசு பதிவேட்டில், தங்களுடையப் பெயரை மாற்றாமல், மதத்தை மட்டும் மாற்றிக் கொண்டு, செயல் படுகின்றவர்கள். அவர்களைப் போல எண்ணற்றோர், இந்து மதத்தில் இருந்து, மற்ற மதத்திற்கு மாறி வருவது, அன்றாடம் நடந்து வரும் நிகழ்வு.

தங்களது விருப்பப் படி, எவரும் எந்த மதத்தையும், பின்பற்றலாம். ஆனால், கட்டாயத்தின் மூலமாகவோ அல்லது ஆசை வார்த்தை மூலமாகவோ, மதம் மாறுவது மிகவும் தவறு. எனவே தான், டாக்டர் அம்பேத்கர், “பட்டியலின மக்கள் யாரேனும் மதம் மாறினால், அவர்களுக்கு  உண்டான சலுகைகள் பறிக்கப் படுவதுடன், அவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவே, கருதப் படுவார்கள்” என்னும் வகையில், சட்டம் இயற்றி உள்ளார்.

“ஏழையென்றும் அடிமையென்றும்

      எவனும் இல்லை ஜாதியில்,

இழிவு கொண்ட மனிதரென்பது

      இந்தியாவில் இல்லையே ’’ – பாரதியார்

  • . ஓம் பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

Share it if you like it

One thought on “மதம் மாறினார்கள்.! மனம் மாறினார்களா.!?

  1. மதிப்பிற்குரிய திரு.ஓம் பிரகாஷ் அவர்கள் தொடர்ந்து நல்லவிதமான கட்டுரைகளை எழுதி வருகிறார்.
    கிறிஸ்தவ தீண்டாமையை அழகாக தொகுத்து உள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள்.

Comments are closed.