மின் வினியோகமே இல்லாமல், வாட்ஸப்பில் எப்படி தொடர்பு கொள்வார்கள் ? கனிமொழிக்கு நெட்டிசன்கள் கேள்வி !

மின் வினியோகமே இல்லாமல், வாட்ஸப்பில் எப்படி தொடர்பு கொள்வார்கள் ? கனிமொழிக்கு நெட்டிசன்கள் கேள்வி !

Share it if you like it

தூத்துக்குடி காயல்பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 932 மி.மீ. (ஒரு ஆண்டுக்கான மழை ஒரே நாளில் விழுவதை விட அதிகமான அளவு). இது தூத்துக்குடியில் 1000 ஆண்டுகளில் ஒருமுறை நடக்கும் நிகழ்வாக இருக்கலாம். இது புயல் கூட இல்லை, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கூட இல்லை. ஒரு புயல் சுழற்சியில் இருந்து பெய்யும் மழை. இது 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் சமவெளிப் பகுதிகளில் பதிவான அதிகபட்ச மழையும், 1992-ல் மாஞ்சோலை2யில் பதிவான 965 மி.மீ மழைக்கு 2வது அதிக மழையும் ஆகும்” இவ்வாறு வெதர்மேன் கூறியுள்ளார்.

திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த சனிக்கிழமை இரவு முதலே பல இடங்களில் கனமழை பெய்து வந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. வெளியே செல்ல முடியாமல் வீடுகளுக்குள் மக்கள் முடங்கினர். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பல இடங்களில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தென்மாவட்டங்களுக்குச் செல்லும் வந்தே பாரத் ரயில் உள்பட பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தூத்துக்குடியில் கனமழை காரணமாக சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. நிவாரண முகாம்களில் 2500 க்கும் மேற்பட்டோர் தஞ்சம் அடைந்துள்ளனர். மின்வினியோகம் மற்றும் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி, தூத்துக்குடியில் கனமழை பாதித்த பகுதிகளில் உதவி வருகிறோம். அவசர உதவிக்கு 8077880779 என்ற எண்ணுக்கு வாட்சப் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

அங்கு வெள்ளம் வந்து பாதிக்கப்பட்ட பகுதியில் மின்வினியோகமே இல்லை, இதில் அவர்கள் எப்படி வாட்ஸப்பில் தொடர்பு கொள்வார்கள், உதவி செய்ய வேண்டும் என்கிற நல்லெண்ணம் இருந்தால் களத்தில் இறங்கி செய்ய வேண்டும். அதைவிட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விட்டு வீட்டில் ஹாயாக இருந்துவிட்டு, நிலைமை சீரானபிறகு நாங்கள் தான் உதவி செய்தோம் என்று பீற்றி கொள்ளக்கூடாது. இவ்வாறு சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.


Share it if you like it