துர்கா சிலையை சேதப்படுத்திய புர்கா பெண்கள்!

துர்கா சிலையை சேதப்படுத்திய புர்கா பெண்கள்!

Share it if you like it

ஹைதராபாத்தில் நவராத்திரி பூஜையில் வைத்திருந்த துர்கை அம்மன் சிலையை, அடையாளம் தெரியாத புர்கா அணிந்த 2 பெண்கள் சேதப்படுத்திய விவகாரம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாகக் கூறி, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பினரின் வீடுகள், அலுவலகங்களை குறிவைத்து என்.ஐ.ஏ. அமைப்பு மாஸ் ரெய்டு நடத்தியது. இதை கண்டித்து தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், பி.எஃப்.ஐ. அமைப்பினர் பெட்ரோல் குண்டு வீச்சு, பஸ் உடைப்பு, பொது சொத்துக்களை சூறையாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் வீடுகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக, 15-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். கேரளாவில் பஸ்களை சேதப்படுத்திய சம்பவத்தில் பி.எஃப்.ஐ. அமைப்பினரிடம் 5.6 கோடி ரூபாய் இழப்பீடு கோரி, அம்மாநில உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறது போக்குவரத்துத்துறை.

இந்த நிலையில்தான், ஹைதராபாத்தில் புர்கா அணிந்த பெண்கள், துர்கா சிலையை சேதப்படுத்தி இருக்கிறார்கள். நவராத்திரி பண்டியையை முன்னிட்டு, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாவட்டம் கைரதாபாத் பகுதியில், வழிபாட்டுக்காக துர்கை அம்மன் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில், துர்கை அம்மனை சிலை வைக்கப்பட்டிருந்த பந்தலுக்குள் நேற்று புர்கா அணிந்த 2 பெண்கள் நுழைந்திருக்கிறார்கள். கையில் ஸ்பேனர் போன்ற பொருட்களை வைத்திருந்த அப்பெண்கள், துர்கை அம்மன் சிலையை அடித்து உடைத்தனர். இதைப் பார்த்து அப்பகுதி மக்கள், விரைந்து வந்து அப்பெண்கள் இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

போலீஸார் இரு பெண்களையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில், துர்கை அம்மன் சிலையை சேதப்படுத்துவதற்கு முன்பு இருவரும் அருகிலுள்ள கன்னிமேரி மாத சிலையை சேதப்படுத்தியது தெரியவந்தது. இரு பெண்களுக்கும் வயது 22 முதல் 23-க்குள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இருவரும் தாங்களது பெயர் மற்றும் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள், எதற்காக இப்படிச் செய்தார்கள் என்பன போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து வருவதாகவும், போலீஸாரின் விசாரணைக்கு இரு பெண்களும் ஒத்துழைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.


Share it if you like it