பெரம்பூரில் நேற்று இரவு ஒரு கும்பல் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி படுகொலை செய்தது.
இது சென்னை மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பலரும் தங்களது சமூக வலைத்தளங்களில் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் செய்தி வாசிப்பாளாராக இருந்த அனிதா சம்பத் தனது கண்டனத்தை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அந்த காணொளியில் அவர் பேசியதாவது :
நான் படிச்ச காலத்திலுருந்து பெரம்பூர்ல தான் இருக்கேன். இப்பவும் அம்மா வீட்ல நார்த் மெட்ராஸ் தான். உள்ள வரும்போதே அவ்வளவு வைபா இருக்கும். எனக்கு நார்த் மெட்ராஸ்னா அவ்வளவு புடிக்கும்.ஆனா இப்போ நார்த் மெட்ராஸ்க்கு போகணும்னு நெனச்சாலே ரொம்ப பயமா இருக்கு. ஏன்னா நேத்து ஒரு தேசிய கட்சியை சேர்ந்த தலைவரான ஆம்ஸ்ட்ராங் ஸார அசால்ட்டா ஆறு பேரு வெட்டிட்டு போயிருக்காங்க.எங்கிருந்து இவ்வளவு தைரியம் வந்தது. இதுவே மனசு பதறுது. இதுக்கப்புறம் அரெஸ்ட் பண்ணிட்டன்னு ஒரு ஆறுபேரை காட்டுவாங்க. அந்த ஆறு பேராச்சும் நெஜமாவே வெட்டுன ஆளுங்க தானா இல்ல யாராச்சு கூட்டு வந்து சரண்டர் பண்ண வைப்பாங்களா.அப்படின்னு இன்னொரு பக்கம் பயமா இருக்குது.ஒரு தேசிய கட்சியில இருக்காங்க. நெறைய ஆளுங்க இருப்பாங்க. அவங்களுக்கே இந்த நெலமைனா சாதாரண வீட்ல இருக்கருவங்க வயசானவங்க அவங்க எல்லாம் எப்படி வாழ்வாங்க. ஸ்விக்கி டீசர்ட் போட்டு வெட்டிருக்காங்கங்க. அப்போ எப்படி நம்பி நாங்க இனிமேல் ஆன்லைன்ல ஆடர் பண்ணுவோம். எப்படி டெலிவரி வாங்குவோம்.
ஹெல்மெட் போடாம போனா கொலை பண்ணவன் மாறி நிக்க வைக்குறிங்க. எலக்ஷ்ன் டைம்ல ரோட்ல போனா துருவி துருவி செக் பண்றீங்க. இவ்வளவு ஸ்ட்ரிக்டா இருக்கீங்க.நல்ல விஷயம்தான். அவ்வளவு ஸ்ட்ரிக்டா இருக்க நீங்க இந்த மாறி அருவா எடுத்துட்டு வந்து வெட்றாங்கனா உங்களுக்கு தெரியாம இருக்குமா. காசுக்காக அடுத்துவங்கள கொலை பண்ணி சாப்பிட்டா அந்த சாப்பாடு எப்படி தொண்டை குழில இறங்கும்.நீங்க எல்லாம் எப்படி நைட்ல நிம்மதியா தூங்குவீங்க. இவ்வாறு திமுக அரசை விமர்சித்து செய்தி தொகுப்பாளர் அனிதா சம்பத் வெளியிட்ட காணொளியானது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.