கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதி அயோத்தி ராமர் கோயிலில் நடைபெற்ற பிராண பிரதிஷ்டை மிக சிறப்பாக நடைப்பெற்றது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் பல்வேறு விதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாகக் காட்சி அளித்தது. விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான விவிஐபிக்கள் அயோத்தி வந்தனர். . உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் அயோத்தி ஸ்ரீ ராமரை தரிசிக்க வந்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகை தந்தார். பட்டாடைகளை பாரம்பரிய முறைப்படி அணிந்து வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரும், அவரோடு, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் ஜி பாகவத், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யாநாத் ஆகியோர் கருவறைக்குள் சென்று ஸ்ரீ ராமரை தரிசித்தனர்.
இந்நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏன் அயோத்தி கோவிலுக்கு வரவில்லை. அவருக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை. ஜனாதிபதி திரவுபதி முர்மு பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர் என்பதால் தான் அயோத்தி கோவிலுக்கு வரவில்லை என வாய்க்கு வந்தபடி பல உருட்டுகளை உருட்டினர் இந்த திராவிட கட்சிகளும் கம்யூனிஸ்ட் கட்சிகளும். அதற்கெல்லாம் சேர்த்து பதிலடி தரும் விதமாக நேற்று அயோத்தி கோவிலுக்கு சென்று ஸ்ரீ ராமரை தன் கண்குளிர கண்டு மனதார தரிசித்தார். பின்னர் ஜனாதிபதி திரௌபதி முர்மு சரயு நதிக்கரையில் நடந்த ஆரத்தியில் கலந்து கொண்டார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில், அயோத்தியில் பகவான் ஸ்ரீராமரின் குழந்தை வடிவத்தைக் கண்ட தெய்வீக அனுபவத்தை என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியாது. ராம்-கேவத் சுலோகம் முதல், ஸ்ரீ ராமர் அன்னை ஷபரியின் எஞ்சிய பழங்களை சாப்பிடுவது வரை, இதுபோன்ற மனதைத் தொடும் சம்பவங்கள் என் நினைவுக்கு வருகின்றன. நான் உணர்ச்சிகளால் மூழ்கியிருக்கிறேன். இந்த கோயில் இந்திய கலாச்சாரம் மற்றும் சமூகத்தின் இலட்சியங்களின் உயிருள்ள அடையாளமாக உள்ளது, இது அனைவருக்கும் நன்மைக்காக உழைக்க நாட்டு மக்களை தொடர்ந்து ஊக்குவிக்கும். நாட்டு மக்களின் நலனுக்காக பகவான் ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை தெய்வீக பாக்கியமாக கருதுகிறேன். இந்த காலகட்டத்தில் நமது தேசத்தின் முழுமையான வளர்ச்சிக்கான பயணத்தை நேரில் பார்ப்பதும் அதில் பங்கேற்பதும் நல்ல அதிர்ஷ்டம். ஸ்ரீ ராமச்சந்திராவுக்கு வெற்றி !இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.