என்னால் திறக்க முடியாது : வாக்குவாதம் செய்த நிவேதா பெத்துராஜ் !

என்னால் திறக்க முடியாது : வாக்குவாதம் செய்த நிவேதா பெத்துராஜ் !

Share it if you like it

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அப்படத்தைத் தொடர்ந்து டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன், பொன்மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் ஐதராபாத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் போலீஸாரிடம் வாக்கு வாதம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் நிவேதா பெத்துராஜ் காரை போலீஸார் சோதனை செய்ய முயற்சிக்கின்றனர். அப்போது உள்ளே இருந்த நிவேதா பெத்துராஜிடம் கார் டிக்கியைத் திறக்க சொல்லி கேட்கின்றனர். அதற்கு மறுப்பு தெரிவித்த நிவேதா பெத்துராஜ், போலீஸாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபடுகிறார். அப்போது வீடியோ எடுக்கும் நபரை ஏன் வீடியோ எடுக்கிறீர்கள் எனக் கேமராவை நிறுத்துகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *