நான் இந்துவாக பெருமிதமாக உணர்கிறேன் – ஆனால் சனாதனத்தை ஒரு போதும் ஏற்கமாட்டேன் – தமிழக அறநிலையத்துறை அமைச்சர் !

நான் இந்துவாக பெருமிதமாக உணர்கிறேன் – ஆனால் சனாதனத்தை ஒரு போதும் ஏற்கமாட்டேன் – தமிழக அறநிலையத்துறை அமைச்சர் !

Share it if you like it

ஒரு போதும் சனாதனத்தை ஏற்றுக் கொள்ள மாட்டேன். இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். கடைசி வரை இந்துவாகவே இருப்பேன். பரந்து விரிந்த இந்து மதத்தை சனாதனம் என்ற சிறிய வட்டத்துக்குள் சுருக்க முடியாது என்று சனாதன விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட வழக்கில் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தரப்பில் வாதம் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் இதுவரையில் விசித்திரமான எத்தனையோ வழக்குகளை பார்த்திருக்கிறது. ஆனால் இது போன்ற ஒரு விசித்திரத்தை பார்த்ததில்லை என்ற வசனங்களை திராவிடத்தால் தமிழகம் கடந்த காலங்களில் திரைப்படத்தில் பார்த்து இருக்கிறது. தற்போது திராவிட ஆட்சியாளர்களால் அது நீதிமன்றத்தில் நேரடியாகவே அரங்கேற தொடங்கி இருக்கிறது. அதன் சமகால சாட்சியம்தான் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் இந்த உயர்நீதிமன்ற வாதம்.

சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் திராவிடர் கழகத்தின் துணை அமைப்பான முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது. உள்ளரங்க நிகழ்வாக தமிழக காவல்துறையின் அனுமதியோடும் ஒத்துழைப்போடும் பாதுகாப்போடும் நடந்த இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட செயலாளர் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுகவின் இளவரசர் இளைஞரணி மாநில செயலாளர் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள். இருவருமே மேடையில் போட்டி போட்டுக் கொண்டு சனாதன தர்மத்தை ஒழிப்பதை பற்றி பகிரங்கமாக பேசினார்கள்.

தமிழகத்தில் தொடங்கி நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளையும் பலத்த எதிர்ப்பையும் இந்த நிகழ்வு ஏற்படுத்தியது . அதன் பிறகும் உதயநிதி சனாதனத்தை ஒழிப்பதில் பின்வாங்கும் பேச்சு இல்லை .இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்ற இலக்கில் தான் திமுக என்ற கட்சியே தொடங்கப்பட்டது. ஆட்சியே பறிபோனாலும் கவலை இல்லை . கொரோனா டெங்கு போல சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டியது என்று பேசினார் . அவரது பேச்சை முழு மனதோடு வரவேற்று ஆதரித்தார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. இதை எதிர்த்து நாடு முழுவதும் கண்டனங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடந்தது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் கீழ் ஏற்கனவே தமிழக அரசுக்கும் அமைச்சர்களுக்கும் தனித்தனியே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

சனாதன ஒழிப்பு மாநாடு நடந்தது அதற்கு மாநில அரசு அனுமதி பாதுகாப்பு வழங்கியது மற்றும் மாநில அமைச்சர்கள் அதிலும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பங்கேற்றதை எதிர்த்து தமிழகத்தில் இந்து முன்னணி சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பொறுப்பில் இருப்பவர் மக்கள் பிரதிநிதியாக மாநில அரசு பிரதிநிதியாக இருக்கும் இரண்டு அமைச்சர்கள் சனாதன தர்மத்திற்கு எதிராக ஒழிப்பு மாநாடு நடத்தியதையும் அதற்கு மாநில அரசு அனுமதி வழங்கியதையும் கண்டித்தும் உரிய நடவடிக்கை கோரும் விதமாக கோ வாரண்டோ வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கை எதிர்கொள்ளும் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் நான் தனிப்பட்ட மனிதராகத்தான் அந்த விழாவில் பங்கேற்று பேசினேன். அமைச்சராக இல்லை என்று அந்தர் பல்டி அடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரத்தை நீதிமன்றத்தில் அறநிலையத்துறை அமைச்சர் பொறுப்பில் இருக்கும் சேகர் பாபு தற்போது தனது தரப்பு வாதமாக ஒரு போதும் சனாதனத்தை ஏற்றுக்கொள்ள மாட்டேன். இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். கடைசி வரை இந்துவாகவே இருப்பேன் பரந்து விரிந்த இந்து மதத்தை சனாதனம் என்ற சிறிய வட்டத்துக்குள் சுருக்க முடியாது என்று வாதம் செய்திருப்பது நீதிமன்றத்தை கடந்து திரும்பிய பக்கமெல்லாம் பலத்த சிரிப்பலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்துவாக இருப்பதில் பெருமை கொள்பவரால் சனாதனத்தை மறுதலிக்க முடியாது. கடைசி வரை இந்துவாகவே இருப்பேன் என்ற உணர்வுள்ள ஒரு இந்துவாக இருப்பவரால் அந்த இந்து தர்மத்தின் ஆணி வேராகிய சனாதனத்தை அருத்தெறிவேன் என்ற பொருளில் சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தி இருக்க முடியாது.

இந்துவாக இருப்பதை பெருமிதமாக உணரும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவால் இந்து மத வழிபாட்டுத் தலங்களை இந்து அறநிலையத்துறை ஆகமங்கள் ஆலய கருவறை வரையிலும் அத்து மீறுவதை எப்படி அனுமதிக்க முடிந்தது? இந்துமத வழிபாட்டுத் தலங்களை அனைத்து மதத்தவருக்குமான பொதுவான சுற்றுலா தலங்கள் போல பேசவும் நிர்வகிக்கவும் நடவடிக்கை வாயிலாக நிலை நிறுத்த முயற்சிக்கவும் எப்படி முடிந்தது? .

பழநி மலை கோவில் விவகாரத்தில் இந்து மத வழிபாட்டுத் தலங்களில் பிற மதத்தவர்களுக்கு அனுமதி இல்லை என்ற கடந்த கால நடைமுறை அப்படியே தொடர வேண்டும் என்ற மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவை எதிர்த்து அனைவருக்கும் அனுமதி வேண்டும் என்ற ரீதியில் அனைத்து மதங்களுக்கும் பொதுவான தளமாக இந்து ஆலயங்களை நிலை நிறுத்தும் வகையில் மேல்முறையீடு செய்வேன் என்று எப்படி சொல்ல முடிந்தது ?

இந்து அறநிலையத்துறை என்ற பெயரில் இந்து ஆலயங்களின் பராமரிப்பு சீர் கெடவும் அதன் சொத்துக்கள் தொடங்கி ஆலயத்தின் பொக்கிஷங்கள் வரை அனைத்தும் களவு போக வரும் எப்படி அமைதியாக வேடிக்கை பார்க்க முடிந்தது? ஆக்கிரமிப்பில் இருக்கும் இந்து ஆலய சொத்துக்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காப்பதும் ஆனால் போதிய ஆவணங்கள் இல்லை என்ற பெயரைச் சொல்லி 200க்கும் மேற்பட்ட இந்து ஆலயங்களை இரண்டு ஆண்டுகளாக இடித்து தரைமட்டம் ஆக்குவதையும் இந்து அறநிலையத்துறை எப்படி அனுமதித்தது? இந்து இந்து மதத்தின் வழிபாட்டு முறைகள் திருமணச் சடங்குகள் உள்ளிட்டவற்றையெல்லாம் பொதுவெளியில் தரக்குறைவாக விமர்சனம் செய்த திமுக தலைவர் ஸ்டாலின் மீது இந்து இதுவரை இந்து அறநிலையத்துறை எடுத்த சட்ட நடவடிக்கை என்ன?.

மாற்று மத பண்டிகைகளுக்கு முதல் நபராக வாழ்த்து தெரிவிக்கும் தமிழக முதல்வர் இந்து பண்டிகைகளையும் அதன் கொண்டாட்டங்களையும் திட்டமிட்டு புறக்கணிப்பதும் அவமதிப்பதும் ஏன் அதை இதுவரை இந்து அறநிலையத்துறை அமைச்சர் கண்டிக்காதது ஏன் மாறாக ஸ்டாலினின் தலைமையின் கீழ் அவர் சார்ந்திருக்கும் திமுக ஆட்சியிலும் கட்சியிலும் தொடர்ந்து எப்படி சேக்கர்பாபுவால் நீடிக்க முடிகிறது? இந்துவாக உணரும் இந்துவாகவே இருப்பேன் அதை பெருமிதமாக உணருபவரால் திமுக கட்சியின் ஆட்சியின் இந்து விரோத போக்கை எப்படி அனுமதிக்க முடிந்தது? . இந்துவாக இருக்கும் ஒருவரால் இதையெல்லாம் செய்ய முடிந்தது சாத்தியம். எனில் ஒன்று அவருக்கு இந்து சமயத்தின் அர்த்தம் தெரியவில்லை என் அல்லது அவர் இந்து சமயத்தின் மார்பில் உண்மையாக அரசாட்சி செய்யவில்லை என்பதே பொருள்.இதை நீதிமன்றங்கள் உரிய வகையில் விசாரணை செய்து நீதி வழங்க வேண்டும் என்பதே இங்குள்ள ஒவ்வொரு சனாதனியின் கோரிக்கை.


Share it if you like it