கொரோனா விதிமுறைகள் மீறப்படும் பட்சத்தில் மதுக்கடைகள் மூடப்படும் என தமிழக முதல்வர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமூக ஆர்வலர்கள், மருத்துவ நிபுணர்கள், மூத்த அரசியல் தலைவர்கள், ஏழை, எளியவர்களின் தொடர் கோரிக்கையை எல்லாம் புறம் தள்ளிவிட்டு. தமிழக அரசு மதுக்கடைகளை திறக்கும் முடிவுக்கு வந்தது. அதன்படி 27 மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையில் டாஸ்மாக் கடைகள் நேற்றைய தினத்தில் இருந்து செயல்பட்டு கொண்டு வருகிறது.
முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு, மட்டுமே மதுபாட்டில்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒரே நபருக்கு அதிகளவில் மதுபானங்களை வழங்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல நடைமுறைகளை தமிழக அரசு தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் தமிழக முதல்வர் இவ்வாறு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
போலி மது விற்பனை உள்ளிட்டவை தமிழக மக்களை சீரழிக்கக் கூடாது என்பதற்காகவே மதுக்கடைகள் திறக்கப்பட்டதாகவும், கொரோனா தடுப்பு விதிமுறைகள் மீறப்பட்டால் உத்தரவு திரும்ப பெறப்படும் என்று முதல்வர் எச்சரிக்கை விடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.