என் மண் என் மக்கள் நடைப்பயணத்தை ஸ்ரீரங்கம் தொகுதியில் நேற்று நடத்தினார். அதில்,சனாதனத்தை தமிழ்நாட்டில் தூக்கிப்பிடிக்கும் ஒரே கட்சி பாஜக தான். மருது சகோதரர்கள் ஜம்புத்தீவு பிரகடனத்தை ஸ்ரீரங்கம் கோவில் சுவற்றில் ஒட்டினர். அதுபோல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அறநிலைத்துறையே இருக்காது. திமுகவின் வாக்குறுதியான ஸ்ரீரங்கத்தில் வாகன நிறுத்துமிடம், பேருந்து நிலையம் அமைத்து தருவதாக சொல்லி செய்யாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக அனைத்தும் நிறைவேற்றப்படும். மேலும் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து தமிழ்நாட்டில் கோவில்களின் முன் இருக்கும் கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்கிற வாசகத்துடன் இருக்கும் ஈ.வே.ராமசாமி நாயக்கர் சிலையை அகற்றுவதே. அதற்கு பதிலாக சுதந்திர போராட்ட வீரர்கள், ஆழ்வார்கள், தமிழ் புலவர்கள் சிலைகள் வைப்போம் என்று பேசினார்.

பாஜக ஆட்சிக்கு வந்தால், ஈ.வே.ரா சிலையை அகற்றிவிட்டு ஆழ்வார்கள், நாயன்மார்கள் சிலைகள் வைப்போம் !
Share it if you like it
Share it if you like it