பாஜக ஆளும் மாநிலங்களில் பாலியல், போதை குற்றவாளிகளின் வீடுகள் இடிக்கப்படுகிறது. ஆனால் இண்டி கூட்டணி அரசுகள் ஆளும் மாநிலமான மேற்கு வங்கம், தமிழ்நாடு குற்றவாளிகள் சகல வசதிகளுடனும் பாதுகாப்புடனும் வலம் வருவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டை வைத்துள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில்,
மத்திய பிரதேச மாநிலம், குணா மாவட்டத்தில் கள்ள சாராய வியாபாரியான அயன் கான் என்னும் முஸ்லிம், 22 வயது பெண்ணை 10 நாட்களாக வீட்டில் அடைத்து வைத்து, பெவி குயிக் போன்ற பசையை கண்ணில் ஊற்றி கற்பழித்து, சூடு வைத்து கொடுமை செய்துள்ளான். அந்த பெண்ணின் புகாரின் பேரில் குற்றவாளியை கைது செய்தோடு மட்டுமல்லாது ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டிருந்த அவனது வீடு புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டது மத்திய பிரதேச மக்களிடம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
பாஜக ஆளும் மாநிலங்களில் பாலியல், போதை குற்றவாளிகளின் வீடுகள் இடிக்கப்படுகிறது. இண்டி கூட்டணி அரசுகள் ஆளும் மாநிலமான மேற்கு வங்கத்தில் சந்தேஷ்காளி பாலியல் குற்றவாளி திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் ரஹ்மான் ஷேக் சகல வசதிகளுடனும் பாதுகாப்புடனும் வலம் வந்தான்.
தமிழகத்தில் போதை கடத்தல் மன்னன் திமுக கட்சியின் ஜாபர் சாதிக் போன்ற கடத்தல்காரர்கள் பற்றி வாயே திறப்பதில்லை. ஊடுருவல்காரர்களையும் கடத்துகாரர்களையும் ஓட்டு வங்கியாக பார்ப்பதால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான் என்பதை இனியாகினும் இண்டி கூட்டணி கட்சிகள் உணரவேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.