ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தினை பதிவுசெய்துள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
மாண்புமிகு ஜார்கண்ட் முதலமைச்சர் திரு.ஹேமந்த் சோரன் மத்திய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் அப்பட்டமான காட்சி. புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி ஒரு பழங்குடித் தலைவரை துன்புறுத்துவது விரக்தியையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் தூண்டுகிறது. பாஜகவின் கேவலமான தந்திரங்கள் எதிர்க்கட்சிகளின் குரல்களை அடக்கிவிடாது.
பாஜகவின் பழிவாங்கும் அரசியல் இருந்தாலும் திரு.ஹேமந்த் சோரன் தலைவணங்க மறுத்து வலுவாக நிற்கிறது. இன்னல்களை எதிர்கொண்டாலும் ஹேமந்த் சோரனின் மன உறுதி பாராட்டுக்குரியது. பா.ஜ.க.வின் மிரட்டல் தந்திரங்களை எதிர்த்துப் போராடுவதற்கான அவரது உறுதிப்பாடு ஒரு உத்வேகம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
நில அபகரிப்பு சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட முதல்வர் ஹேமந்த் சோரனுக்காக தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் ஏன் ஆதரவாக பேச வேண்டும். அவர் என்ன மக்களுக்கு நல்லது செய்ததற்காகவா கைது செய்யப்பட்டார். மாநிலத்தை முன்னேற்ற கூடிய மிக உயர்ந்த பதவியில் இருந்துகொண்டு ஊழல் செய்தால் கைது செய்யாமல் விருது கொடுப்பார்களா ? இவ்வாறு சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.